திருப்பூர் ரிதன்யாவின் 3 சிம்கார்டு.. அந்தரங்க ரகசியத்தை சொன்ன 11 வயது சிறுவன்.. நீ செத்துட்டியேம்மா
சென்னை: ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. நீதிமன்றத்திலும் இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.. தன்னுடைய மகளின் மரண வழக்கை பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாரிடம், ரிதன்யாவின் அப்பாவும் சமீபத்தில் புகார் தந்திருந்ததுடன், ரிதன்யாவின் பிரேதப்பரிசோதனை அறிக்கை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார். இந்நிலையில், உயிரிழந்த ரிதன்யா குறித்து ஆர்ஜே ஷா, தன்னுடைய சேனலில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்..
Sha Boo Three என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஆர்ஜே ஷா, "ரிதன்யா இறந்ததை கேள்விப்பட்டதுமே, அவரது மாமியார் வீட்டினர், "நல்லவேளை, எங்க வீட்டில அந்த பொண்ணு சாகல என்று சொன்னார்களாம்.. இது ரிதன்யாவின் அப்பா காதுகளுக்கும் வந்துள்ளது.. அதேபோல ரிதன்யா ஜுன் 28ம் தேதி இறந்த நிலையில், ஜூலை 4ம்தேதியே, மாமியார், கணவர், மாமனார் மூன்று பேரும் ஜாமீன் கோரினார்களாம்.

ரிதன்யாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் 10 வரிகளில்தான் இருந்துள்ளது..இதைப்பார்த்து நீதிபதியே கோபப்பட்டுள்ளார். இதென்ன கவனக்குறைவான உடற்கூராய்வு அறிக்கையாக உள்ளதே என்று மாண்புமிகு நீதிபதி அவர்களே கோபப்பட்டு கேட்டுள்ளார்.
போன் ஆடியோக்களின் தடயவியல் ஆய்வு ரிப்போர்ட் எங்கே? என்றும் கேட்டுள்ளார். இதற்குபிறகுதான் ஜாமீன் அவர்களுக்கு தராமல் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இப்போதுவரை ஜாமீனில் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது..
11 வயது சிறுவன் யார்
ரிதன்யா வழக்கின் விசாரணை நடந்துவரும்நிலையில், 11 வயது சிறுவன் குறித்தும் தெரியவந்துள்ளது.. ரிதன்யாவின் உறவுக்கார பையனாம் இந்த சிறுவன்.. குழந்தையிலிருந்தே வளர்த்து வருபவர்கள்..
அக்கா, அக்கா என்று ரிதன்யா என்றாலே இந்த சிறுவனுக்கு பிரியம் அதிகம்.. ரிதன்யாவுக்கும் இந்த சிறுவன்மீது பாசம் அதிகம். திருமணம் முடிந்ததுமே தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் ரிதன்யா தவித்துள்ளார்..
அப்போது இந்த 11 வயது சிறுவனிடம், தன்னை உடம்பு முழுக்க கடித்து பாலியல் துன்புறுத்தல் தந்ததை சொல்லி அழுதுள்ளார் ரிதன்யா..
"கல்யாணம் என்றாலே பெரிய விஷயமாக நினைத்தேன்.. இப்படின்னு தெரிந்திருந்தால் கல்யாணமே செய்திருக்க மாட்டேன்" என்றாராம்.. அதுமட்டுமல்லாமல் தான் சொன்ன இந்த விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது, இதை சொன்னால் அவர்களால் தாங்கி கொள்ள முடியாது" என்று சத்தியமும் செய்ய சொன்னாராம் ரிதன்யா.
ரிதன்யா தன்னிடம் சொன்ன தகவல்களை எல்லாம் ஆர்டிஓ விசாரணையின்போது, அந்த சிறுவன் சொன்னதாக கூறப்படுகிறது..
மறைமுக வரதட்சணை கொடுமை
அதேபோல, ரிதன்யாவின் திருமணத்துக்கு மாமியார் வீட்டினர் வரதட்சணையை கேட்டார்களா என்றால், மறைமுகமாக கேட்டதாக ரிதன்யாவின் சித்தப்பா சொல்கிறார்..
திருமணத்தின்போது 300 சவரனும், பிறகு, குழந்தை பிறப்பது உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் என சேர்த்து 200 சரவனும் என மொத்தம் 500 சரவன் போடுவதற்தாக ரிதன்யாவின் பெற்றோர் ஒப்புக் கொண்டார்களாம்.
பேட்டரி கார் 62 லட்சம் ரூபாய்க்கு வேண்டும் என்று மாப்பிள்ளை தரப்பில் கேட்கப்பட்டதாம்.. தனக்கு வெள்ளை கலர் பிடிக்கும் என்று ரிதன்யா சொன்னாலும், மாப்பிள்ளைக்கு பிடித்த கலரில்தான் கார் வாங்கப்பட்டுள்ளது. இப்படி மறைமுகமாகவே வரதட்சணை கேட்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.
3 சிம்கார்டு பயன்படுத்திய ரிதன்யா
அதுமட்டுமல்ல, ரிதன்யா 3 சிம்கார்டை பயன்படுத்தி வந்ததாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின.. இதுகுறித்து விசாரித்தபோது, ஏற்கனவே செல்போன் வைத்திருக்கும் ரிதன்யா, கவினுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, கவினுடன் பேசுவதற்காக 2வதாக புதிய சிம் கார்டை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது..
ஃபேஷன் டிசைனிங்
மேலும் பெண்களுக்காகவே, பேஷன் டிசைனிங் கோர்ஸ் நடத்தி வந்துள்ளார் ரிதன்யா.. இதற்காக பலருக்கும் கிளாஸ் நடத்த வேண்டியிருந்ததாலும், அது தொடர்பான விளம்பரங்களை செய்ய வேண்டியிருந்ததாலும், 3வது சிம்கார்டை பிசினஸ்-க்காக வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
தன்னுடைய ஆரி கிளாசுக்கு ரிதன்யாவை சுருக்கி ரியா என்று பெயர் வைத்துள்ளார்.. 2 மாத கிளாசுக்கு 9 ஆயிரம் கட்டணம் வாங்கியிருக்கிறார் ரிதன்யா. ஆனால், பணவசதி இல்லாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை மட்டுமே பெற்றுள்ளார்..
எம்எஸ்சி படித்து முடித்ததுமே யோகா படித்துள்ளார் ரிதன்யா.. பியூட்டிஷியன் கோர்ஸ் படித்துள்ளார்.. மெஹந்தி போடுவது, ஆரி வொர்க்குகள் போன்றவற்றையும் கற்று தேர்ந்துள்ளார் ரிதன்யா.. கார்டனிங் கற்றுள்ளார், தங்கம் சம்பந்தமான கோர்ஸையும் படித்தாராம் ரிதன்யா,..
பிசினஸ் வுமன் - பெண்கள் சுய சம்பாத்தியம்
இவ்வளவு படிப்பை ஏன் படிக்க வேண்டும் என்று ரிதன்யாவின் தோழிகளிடம் கேட்டால், "திருப்பூர், அவிநாசி பகுதிகளிலுள்ள இல்லத்தரசிகளை, பிசினஸ் நபர்களாக மாற்ற வேண்டும்.. பெயரளவுக்கு அவர்களிடம் கட்டணம் வாங்கி கொண்டு, அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களை கற்றுத்தந்தால், சுயமாக சம்பாதிப்பார்கள்.. யாரையும் சார்ந்து வாழ வேண்டிய தேவையிருக்காது என்று ரிதன்யா சொல்வாராம்..
அந்த பெண்களுக்கு கற்று தர வேண்டும் என்பதற்காகவே, அனைத்து கோர்ஸ்களையும் ரிதன்யா கற்று தேர்ந்ததாக, அவரது தோழிகள் கூறுகிறார்கள். .
ஒன்றரை வருடம் ஆரி கிளாஸ் நடத்தியதில், பல பெண்கள் 2 மாத கோர்ஸ்களை ஆர்வத்துடன் வந்து படித்துள்ளனர்.. இதில் பல பெண்கள், 1000, 2000 ரூபாயை தனியாக சம்பாதிக்கவும் துவங்கிவிட்டனர்.
நீ செத்துட்டியேம்மா
ஒருமுறை தன்னுடைய ஆரி கிளாஸில் சேருவதற்காக ஏழை பெண் ஒருவர் வந்துள்ளார்.. அந்த ஏழைப்பெண்ணின் கணவர் குடிகாரர் என்பதால், வெறும் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்கியிருக்கிறார் ரிதன்யா. ஒருநாள் அந்த ஏழை பெண்ணின் மகன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றபோது, அந்த மகனை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றியது ரிதன்யாதானாம்.. போதாக்குறைக்கு சிசிக்சைக்கு 5 ஆயிரம் ரூபாய் தந்து உதவியிருக்கிறார் ரிதன்யா.
ரிதன்யா மரணத்துக்கு, அந்த ஏழை பெண் வந்திருந்து, கதறி அழுதார்.. என் மகனை காப்பாத்திட்டு நீ செத்துட்டியேம்மா என்று கண்ணீர் விட்டுள்ளார்.
எனவே ரிதன்யாவை பொறுத்தவரை தைரியமான பெண்மணியாக மட்டுமல்ல, கனவுடன் வாழ்ந்து வந்த பெண்ணாகவே இருந்துள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications