TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு
சென்னை: நேற்று மாலை வெளியான "டி.என் 2026" படத்தின் ப்ரோமோ, வெளியான சில மணி நேரங்களிலேயே சோசியல் மீடியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ப்ரோமோ வெளியான உடனே, இந்த படத்தைப் பற்றிய விமர்சனங்கள், எதிர்பார்ப்புகள், அதைவிட அதிகமாக வாக்குவாதங்களே இணையத்தில் பரவி வருகிறது.

ப்ரோமோவால் கிளம்பிய சர்ச்சை
ப்ரோமோவில் அரசியல் பின்னணியில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஒட்டிய சாடல் காட்சிகள் இருப்பது ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சிலர் "இதெல்லாம் தேவையா?" என்று கேட்க, மற்றவர்கள் சினிமாவை சினிமாவாக பாருங்க பாஸ் என்று சொல்லி வருகிறார்கள்
அதே சமயம், சில அரசியல் நபர்களை ஒட்டிய குறிப்புகளும் ப்ரோமோவில் இருப்பதாக கூறப்படுவதால், இந்த படம் ரிலீஸ்க்கு முன்பே சர்ச்சை மையமாக மாறியுள்ளது.
டி.என் 2026 என்ன சொல்லப் போகிறது?
இந்த படம் சாதாரண கமர்ஷியல் படம் இல்லை. முழுக்க அரசியல் சாடலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் நடந்த மாற்றங்கள், அதிகாரம், மக்கள் மனநிலை-இவற்றை எல்லாம் கலந்த ஒரு ரியலிஸ்டிக் அணுகுமுறையுடன் இந்த படம் உருவாகியுள்ளது.
நட்டி என்கிற நட்ராஜ் இந்த படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். ஒவ்வொரு கெட்டப்பும் ஒரு அரசியல் முகத்தை அல்லது மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக இருக்குமென கூறப்படுகிறது. அதிலும் ஒரு காட்சியில் நடிகர் விஜய் கூட்டத்திற்கு வருவது போலவே நட்டியும் நடந்து வருகிறார். விஜய்யின் டிரஸ் கோடில் நட்டியும் இருக்கிறார். இதுதான் இப்போ பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் அந்த ப்ரோமோவில் புஸ்ஸி ஆனந்த் போலவே தம்பி ராமையா இருக்கிறார். அதுபோல செங்கோட்டையன் கெட்டப் மற்றும் ஸ்டைலில் எம் எஸ் பாஸ்கரும், சீமான் போல கிங்ஸ்லி பேசுகிறார். இப்படி இந்த படத்தில் பல அரசியல் பிரபலங்களை கிண்டல் செய்வது போல பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
ப்ரோமோவுக்குப் பிறகு நட்டி பேசியது
ப்ரோமோ வெளியானதும் எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில், நட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் பல முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். "இந்த படத்தில் நான்தான் அந்த காட்சிகளில் நடித்திருக்கிறேன். இதை விஜய் பார்த்தாலும் அவர் எதுவும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார். இது ஒருவரை குறிவைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் இல்லை. கதைக்கு தேவையான விஷயங்கள்தான்," என்று தெளிவாக கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்த படத்தில் நான்கு, ஐந்து கெட்டப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு கெட்டப்பும் வாழ்க்கையில் நாம் பார்த்த அரசியல் மாற்றங்களை பிரதிபலிக்கும். கடந்த 50 வருடங்களாக நம்மால் பார்க்கப்பட்ட அரசியல், அதன் பின்னணியில் உள்ள உண்மைகள்-அதை சினிமா மொழியில் சொல்ல முயற்சித்திருக்கிறோம்," என விளக்கமளித்துள்ளார்.
நடிகராக வளர்ந்த நட்டி
ஒளிப்பதிவாளராக பாலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கிய நட்டி, பின்னர் நடிகராக மாறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். "சதுரங்க வேட்டை" போன்ற படங்கள் அவரை முழுநேர நடிகராக மாற்றின. இப்போது "டி.என் 2026" மூலம், ஒரு புதிய கோணத்தில்-அதாவது அரசியல் சாடல் படத்தில்-அவர் தனது நடிப்பை வெளிப்படுத்த உள்ளார்.
படக்குழு மற்றும் வெளியீடு
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், நட்டியுடன் இளவரசு, தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications