TN 2026 Review: இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டாரா? தநா 2026ல் கதை இதுதான்! இந்திரஜா நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்குனராக அறிமுகம் ஆகி உள்ள தங்க நட்சத்திரம் 2026 அதாவது TN 2026 படம் இன்று பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் விஜயை கலாய்ப்பது போல காட்சிகள் இருக்கிறது என்று டிரைலரை பார்த்து பலரும் கூறிவந்த நிலையில் இன்று படத்தின் கதை மற்றும் அதில் என்ன நடந்தது என்பது பற்றி இந்திரஜா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தநா 2026 படத்தில் பெரிய திரை பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அதிலும் நட்டி நடராஜ் தான் இந்த படத்தில் மெயின் பில்லர். அவரை தொடர்ந்து தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, இந்திரஜா ரோபோ சங்கர், யாஷிகா ஆனந்த், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் படத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய அரசியல் வருகையை நேரடியாக விமர்சித்து இருக்கிறார்கள் என்று பலரும் திட்டி வந்தனர்.

படக்குழு விளக்கம்
ஆனால் அதை பட குழுவினர்கள் முழுமையாக மறுத்திருந்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷனில் கூட நட்டி நடராஜன் விஜய் ஒரு சிங்கம் அவரை நாங்கள் கிண்டல் செய்கிறோம் என்பதே தவறு என்று சொல்லியிருந்தார். அதோடு நான் விஜயுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னுடைய நண்பர் அவரை நாங்கள் கலாய்க்க முடியுமா என்று சொல்லி இருந்தார்.
இந்திரஜா வெளியிட்ட வீடியோ
ஏற்கனவே நட்டி நடராஜன் நடித்த சதுரங்க வேட்டை படத்தில் ஒரு காட்சியில் இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டாரா? என்று கேட்டிருப்பார். இந்த காட்சி அதிகமாக இணையத்தில் ட்ரோலானது. அடிக்கடி விஜயை கிண்டல் செய்வதற்கு கூட பலர் இதை பயன்படுத்தி வருவார்கள். அதே போல இந்த படத்திலும் நட்டி நடராஜனுடைய தோற்றம் உடை எல்லாம் பார்ப்பதற்கு விஜய் போலவே இருப்பதால் விஜயை தான் கலாய்த்து வைத்திருக்கிறார்கள் என்று பலரும் நம்பி விட்டனர்.
விஜய் பற்றிய கேள்வி
ஆனால் இன்று அந்தப் படம் தியேட்டரில் வெளியானதும் இந்திரா ரோபோ சங்கர் தியேட்டரில் வைத்து ஒரு வீடியோ எடுத்திருக்கிறார். அதில் இன்று வெளியான TN 2026 படம் நாங்கள் பார்த்துவிட்டோம் படத்தில் எந்த இடத்திலுமே விஜய் அண்ணாவை கிண்டல் செய்யவே இல்லை. படத்தில் அவருடைய இமேஜை மக்கள் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். படத்தை பார்த்த ரசிகர்களிடமே கேளுங்கள் என்று அங்கிருந்த ரசிகர்களிடம், இளைய தளபதி தாக்கப்பட்டாரா? என்று கேட்க, அதற்கு எல்லோருமே இல்லை என்று கத்துகின்றனர்.
பிறகு இந்த வாய்ப்பு கொடுத்த தம்பி ராமையாவிற்கு இந்திரஜா நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் நானும் இந்த படத்தை இயக்கிய உமாபதி அண்ணாவும் விஜய் அண்ணாவின் தீவிரமான பேன்ஸ் அவரை நாங்கள் பின்பற்றுவோம் அப்படி இருக்கும்போது விஜய் சாரை எங்களால் எப்படி ட்ரோல் செய்ய முடியும்? இந்த படத்தை விஜய் ரசிகர்கள் எல்லாருமே கொண்டாடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
ரசிகர் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தை பார்த்த பலர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இந்த படத்தில் விஜய் மட்டுமல்ல விஜயுடன் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் என பல நட்சத்திரங்களை மறைமுகமாக கலாய்த்துள்ளனர். படம் முழுவதும் விஜய் அட்டென்ஷன் போல எல்லாம் இல்லை. சில காட்சிகள் விஜயின் அரசியல் வருகைக்கு எலிவேஷன் கொடுப்பது போல உள்ளது என்று பதிவிட்டு இருக்கிறார்.
இன்னும் ஒரு ரசிகர் இந்த படம் முழுக்க காமெடி காட்சிகளும், கலகலப்பான வசனங்களும் இருக்கிறது. சிரித்து சிரித்து வயிறு வலி தான் வருகிறது என்று சொல்லி இருக்கிறார். இதனால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
-
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
பிரசாரத்தில் கொட்டி தீர்த்த விஜய்.. மனைவி சங்கீதா விவாகரத்து கோரியது பற்றி முதல் முறையாக பேச்சு -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
காரைக்குடியில் விஜய் பரப்புரை செய்ய.. 37 நிபந்தனைகள்! லிஸ்ட் போட்ட தேர்தல் ஆணையம்! -
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி -
திருச்சி கிழக்கு தொகுதியில் ‘டபுள்’ விஜய்.. மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டி! முழு லிஸ்ட் இதோ! -
கடலூரில் விஜய்யின் நாளைய பிரசாரம் திடீர் ரத்து.. தவெக சொன்ன காரணத்தை பாருங்க -
நான் அடிச்சா தாங்க மாட்ட.. கெத்தாக இறங்கிய திரிஷா.. ஓஹோ விஷயம் இது தானா? போட்டி அவங்க கூடவா? -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா -
விஜய் பற்றி.. ஒரு வார்த்தை சொல்லாத உதயநிதி.. செமயான ஸ்கெட்ச்.. இதை தவெக எதிர்பார்க்கலையே! -
ஜனநாயகன் பற்றிய கேள்வி, ரஜினி கொடுத்த ரியாக்சன்! கடைசியில் சொன்ன தத்துவம் தான் ஹைலைட் -
கரூர் கேஸில் என் மீது பழியை போட்டார்கள்.. ஜனநாயகனை முடக்கினார்கள்.. அப்படியே ஆக்ரோஷமான விஜய்!












Click it and Unblock the Notifications