Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னத்திரை டூ அமைச்சர் நாற்காலி! ட்ரெண்டாகும் அன்பில் மகேஷ் நடித்த சீரியல் காட்சி! இதை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி, இப்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வெளியாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியல், நிர்வாகம் என்று பரபரப்பாக இருக்கும் இவருக்கு, முன்பு நடிப்பிலும் ஆர்வம் இருந்ததாம். ஆம்! அவர் சன் டிவியில் ஒரு பிரபலமான சீரியலில் நடித்திருக்கிறார் என்பதுதான் அந்த சுவாரஸ்யத் தகவல்!

Anbil Mahesh Tamil Nadu Minister Sun TV

யார் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தி.மு.க.வின் அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர். இவர் முன்னாள் தி.மு.க. அமைச்சர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பொய்யாமொழியின் மகன். இப்படி மூன்று தலைமுறையாக அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்ட அன்பில் மகேஷ், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே.

அரசியல் பயணம்

இவர் 2014-இல் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2021-இல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

பின்னணி

அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் எம்.சி.ஏ. (MCA) பட்டப்படிப்பை முடித்து, கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் மென்பொருள் உருவாக்குநராகப் (Software Developer) பணிபுரிந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

அகல்யா சீரியல்

அரசியல் மற்றும் ஐ.டி. துறையில் இருந்த அன்பில் மகேஷ், ஒரு கட்டத்தில் சின்னத்திரையிலும் தலை காட்டியுள்ளார் என்பதுதான் இப்போதைய வைரல் செய்தி. தற்போது இணையத்தில் வெளியாகி வரும் தகவல்களின்படி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான 'அகல்யா'-வில் நடித்திருக்கிறார். இந்தச் சீரியல் எப்போது வெளியானது, அதில் அவர் யார் என்றெல்லாம் ரசிகர்கள் இப்போது ஆர்வமாகத் தேட ஆரம்பித்துள்ளனர்.

சீரியல் அறிமுகம்

இந்தச் சீரியல் ஒரு காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில், அன்பில் மகேஷ் நடித்த காட்சிகள், அவரது முந்தைய வாழ்க்கைத் துடிப்பையும், நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் இப்போது பேசிக் கொள்கிறார்கள். இது பற்றி ஏற்கனவே ஒரு பேட்டியில் அன்பில் மகேஷ் பேசும்போது நான் அந்த சீரியலில் ஒரே ஒரு காட்சியில்தான் வருவேன் ஆனால் அதை அந்த சீரியலின் ப்ரோமோவில் தினமும் போட்டு காட்டிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு தயாநிதி மாறன் என்னிடம் நேரடியாகவே கலாய்த்தார். நீ நடிச்சது ஒரே காட்சி ஆனால் தினமும் சீரியலில் நீ மட்டும் வருகிறாயே என்று கேட்டார் என்று சிரித்தபடியே அன்பில் மகேஷ் சொல்லி இருந்தார்.

Anbil Mahesh Tamil Nadu Minister Sun TV

பாத்திரத்தின் தன்மை

அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளில் கடுமையான முகத்துடன் காணப்படும் அமைச்சர், இந்தப் பழைய சீரியல் காட்சிகளில் மிகவும் இயல்பாகவும், இளமைத் துடிப்புடனும் நடித்திருப்பது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் நண்பர், ஒரு அரசியல் குடும்பத்தின் வாரிசு, ஐ.டி. நிபுணர், அமைச்சர் எனப் பல முகங்களைக் கொண்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிப்புத் துறையிலும் கால் பதித்திருக்கிறார் என்ற தகவல், அவரது பன்முகத் திறமையைப் பலருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஷால் ஒரு பேட்டியில் பேசும் போது அன்பில் மகேஷ் என்னுடைய பிரண்டு தான் காலேஜ் படிக்கும் போதே 'நல்லா நடிப்பாரு அது தெரியுமா' என்று பேசி இருந்தார். இப்போது அதை வைத்து இந்த பிரமோவில் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

இளம் வயதிலேயே அரசியல் பிரவேசத்துக்கு முன்பு கிடைத்த இந்த நடிப்பு அனுபவம், பொதுவெளியில் அவர் பேசும்போது அல்லது செயல்படும்போது இயல்பான ஒரு பாவனையை வெளிப்படுத்த உதவுகிறதா என்றும் சிலர் ஆர்வத்துடன் கேட்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+