Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட்.. விஜய் டிவிக்கு செம அடி! கெத்து காட்டிய சன் டிவி
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னனி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 2025 ஆம் ஆண்டிற்கான 48 வது வாரத்தில் டாப் 10 சீரியல் டிஆர்பி விபரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி உங்களுக்கு பிடித்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம்

1, மூன்று முடிச்சு சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் வழக்கம் போல இந்த வாரத்திலும் முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. கடந்த வாரம் 9.65 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரத்தில் 10.62 புள்ளிகள் பெற்று தன் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
2, சிங்க பெண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரத்திலும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.67 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
3, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் என்ன தான் ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டு வந்தாலும் இந்த வாரத்தில் அதிகமான திருப்பங்களும் திருப்பாத கதைக்களமும் வந்ததால் அதிகமான டிஆர்பியை பெற்றிருக்கிறது. அதாவது போன வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 9.41 பற்றி மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
4, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரம் 9.09 புள்ளிகள் பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 9.36 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது.
5, மருமகள் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் போன வாரத்தை விட இந்த வாரம் கொஞ்சம் சரிவை சந்தித்திருக்கிறது. போன வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.99 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
6, அன்னம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் கடந்த வாரம் 8.41 புள்ளிகள் பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 8.51 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 8.41 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
8, அய்யனார் துணை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் கடந்த சில வாரங்களாக சிறகடிக்க ஆசை சீரியலை முந்தி இருந்த நிலையில் இந்த வாரம் 8.28 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
9, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7. 91 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
10, சின்ன மருமகள் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் போனவாரத்தை போலவே இந்த வரமும் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. போன வாரத்தில் இந்த சீரியல் 7.72 டிஆர்பி பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் 7.55 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications