இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த எதிர்பார்க்காத சீரியல்கள்... அதுவும் இத்தனை மாற்றங்களா?
சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த முதல் 10 சீரியல்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கிராமம் மற்றும் நகர புறங்களில் ஒளிபரப்பான டிஆர்பி யின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருக்கும் சீரியல்களின் பெயர்கள் வெளியாகி இருக்கிறது.

1, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு அடுத்தடுத்ததாக கடந்த வாரத்தில் அதிகமான பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று கயல் ஜெயித்த எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11.20 அளவைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, சுந்தரி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் அணுவை கடத்திய எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இந்த சீரியல் 10.40 அளவைப் பற்றி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, வானத்தைப்போல சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் துளசியின் மனமாற்றம் சின்ராசுவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் என பரபரப்பான எபிசோடுகளின் காரணமாக இந்த சீரியல் 10.28 அளவைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

4, கண்ணான கண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அப்பா மகள் பாச போராட்டத்தை பற்றிய இந்த கண்ணான கண்ணே சீரியல் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தாலும் டிஆர்பி அளவில் 9.81 அளவைப் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

5, எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் அப்பத்தாவை காணவில்லை என பரபரப்பான எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில், இந்த சீரியல் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் 9.10 அளவைப் பெற்றிருக்கிறது.

6, இனியா சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடங்கிய இரண்டு வாரங்களிலேயே ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் கிராமபுறம் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 8.55 அளவை பெற்றிருக்கிறது.

7, பாரதிகண்ணம்மா சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து இருந்த டி என் ஏ டெஸ்ட் முடிவு வெளியான எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து 8.30 அளவைப் பெற்று ஏழாவது இடத்தில் இருந்து வருகிறது.

8, ஆனந்த ராகம் சீரியல்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனின் மனைவி யார் என்ற விறுவிறுப்பான எபிசோடுகள் இந்த வாரத்தில் ஒளிபரப்பானதால் இந்த சீரியல் டிஆர்பி யில் 7.92 அளவை பெற்றிருக்கிறது.

9, பாக்கியலட்சுமி சீரியல் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் ஏரியா தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்த நிலையில் அதைக் குறித்து பல திருப்பங்கள் வந்தபோதிலும் இந்த சீரியல் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் டிஆர்பி அளவில் 7.89 பெற்றிருக்கிறது.

10, பாண்டியன் ஸ்டோர் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தின் சூப்பர் மார்க்கெட்டை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மூடிவிட்ட பிறகு அவர்கள் மீண்டும் தங்களுடைய பழைய கடையில் வியாபாரத்தை தொடங்கி இருக்கும் நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி அளவில் 6.61 பெற்றிருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications