திரில்லர் விரும்புபவரா நீங்க.. ஓடிடியில் கலக்கும் டாப் 5 சைக்கோ மிரட்டல் படங்கள் லிஸ்ட்
சென்னை: காதல் படங்களை எந்த அளவிற்கு ரசிகர்கள் விரும்புகிறார்களோ அதே அளவிற்கு சைக்கோ திரில்லர் படங்களுக்கும் உலக அளவில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே அதிகமான முன்னணி நடிகர்களும் இந்த மாதிரி திரில்லர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதில் பலரையும் கடைசி நிமிடம் வரை அதிர்ச்சியின் விளிம்பில் வைத்திருக்கும் டாப் 5 தமிழ் சைக்கோ திரில்லர் படங்கள் ஓடிடியில் இருப்பதைப் பற்றி பார்க்கலாம்.

நிபுணன் திரைப்படம்: நடிகர் அர்ஜுன், வரலட்சுமி, சரத்குமார், வைபவ், பிரசன்னா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "நிபுணன்" திரைப்படம் "ஆஹா ஓடிடி" தளத்தில் இருக்கிறது. இந்த திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார்.

இமைக்கா நொடிகள் திரைப்படம்: நடிகை நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி, ராசி கண்ணா போன்ற பலர் நடித்து வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கிறார்.

ராட்சசன் திரைப்படம்: நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால், அம்மு அபிராமி, போண்டா கலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட ராட்சசன் திரைப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் தளத்தில் உள்ளது. இந்த திரைப்படத்தை ராம்குமார் இயக்கி இருக்கிறார்.

சைக்கோ திரைப்படம்: மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சைகோ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இந்த புகைப்படம் தற்போது ஜி5 தளத்தில் உள்ளது.

வேட்டையாடு விளையாடு: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு திரைப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.

இந்த திரைப்படத்தில் ஜோதிகா, கமல் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications