டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 பற்றி அப்டேட் கொடுத்த வெங்கடேஷ் பட்.. ஆனால்! இப்படி ஒரு சம்பவமும் இருக்கா?
சென்னை: Top Cooku Dupe Cooku Season 2: தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியின் சீசன் 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. செஃப் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இது சன் டிவி ரசிகர்கள் மற்றும் சமையல் நிகழ்ச்சிப் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குக் வித் கோமாளி- டாப் குக்கு டூப் குக்கு வரை
சமையல் நிகழ்ச்சியில் காமெடியைச் சேர்த்து ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று, மன அழுத்தத்தையே சரி செய்யும் எனப் புகழ் பெற்றது. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்த சீசனிலேயே நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு வெளியேறியது. அவர்களுடன் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் வெளியேறினார். "நான் விஜய் டிவியில் எண்ட்ரி கொடுத்த போதே மீடியா மேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் தான் பணிபுரிந்தேன். அதனால் அவர்கள் வெளியேறியதால் நானும் வெளியேறுகிறேன்," என வெங்கடேஷ் பட் அப்போது விளக்கம் கொடுத்திருந்தார்.
வெங்கடேஷ் பட்டின் பயணம்
அடுத்த சில காலத்திலே, சன் டிவியில் மீடியா மேசன் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 'குக் வித் கோமாளி' போல இல்லை என்றாலும், வித்தியாசமான செட் மற்றும் பிரபல செஃப்களை இறக்கி ஆச்சரியப்படுத்தினர். முதல் சீசன் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும், ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இந்த முதல் சீசன் நடந்த நேரத்தில், 'குக் வித் கோமாளி' ஐந்தாவது சீசனும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆறாவது சீசன் 'குக் வித் கோமாளி' தொடங்கப்பட்ட நிலையில், 'டாப் குக்கு டூப் குக்கு' இரண்டாவது சீசன் எப்போது எனக் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

சீசன் 2-க்கு தயாராகும் டாப் குக்கு டூப் குக்கு
தற்போது, 'டாப் குக்கு டூப் குக்கு' சீசன் 2 குறித்த முதல் அறிவிப்பு ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவிக்கப்படும் என வெங்கடேஷ் பட் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதற்கான போட்டியாளர் மற்றும் டூப் குக் பிரபலம் தேர்வு பணியும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கடேஷ் பட் சுவாரசியமான சமையல் கலைஞர்
செஃப் வெங்கடேஷ் பட், தனது சமையல் திறமையால் மட்டுமல்லாமல், தனது நகைச்சுவை உணர்வு மற்றும் நேர்மையான விமர்சனங்களால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.'குக் வித் கோமாளி', 'டாப் குக்கு டூப் குக்கு' தவிர, அவர் பல சமையல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும் தோன்றி தனது சமையல் ரகசியங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார். பல பேட்டிகளில் தனது சமையல் பயணம்பற்றியும், தொழில்முறையில் அவர் சந்தித்த சவால்கள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவரது எனர்ஜி, எளிமையான அணுகுமுறை மற்றும் உணவின் மீதான அவரது ஆர்வம் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. ஒருமுறை, "சமையல் என்பது ஒரு கலை மட்டுமல்ல, அது ஒரு விஞ்ஞானம்," என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
'டாப் குக்கு டூப் குக்கு' சீசன் 2, 'குக் வித் கோமாளி'க்கு ஒரு புதிய சவாலாக இருக்குமா அல்லது இரு நிகழ்ச்சிகளும் தனித்துவமாகச் செயல்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆகஸ்ட் 17 அன்று வரவிருக்கும் அறிவிப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications