TCDC: டாப் குக்கு டூப் குக்குவில் சைலண்டாக டைட்டில் வென்ற வில்லன் நடிகர், இரண்டாவது இடம் இவருக்கா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வெற்றியாளர்கள் பற்றிய தகவலை தான் இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகிறோம். இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை யார் பெற்றார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியே வந்து கடந்த வருஷம் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தயாரித்தது. இது பலருக்கும் தெரிந்தது. அதுதான் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் விஜய் டிவியை விட்டு வெளியே வந்த போது அந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆறு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் அங்கிருந்து வெளியே வந்து விட்டார். அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

வெங்கடேஷ் பட் வெளியே வந்ததை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சிலரும் அங்கிருந்து வெளியே வந்து விட்டார்கள். செஃப் தாமு முதலில் வருவதாக சொல்லி இருந்தார். பிறகு தான் வரவில்லை என்று போட்ட போஸ்ட்டை டெலிட் செய்து விட்டார். இப்போதும் அவர் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் இருக்கிறார்.
வெங்கடேஷ் பட் நடுவராக தொடங்கிய டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி முதல் சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது. அதில் நடிகைகளாக கிரண், ஷிவானி நாராயணன், டெல்னா டேவிஸ், பிரியங்கா மற்றும் நடிகர்கள் பெசன்ட் ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட ஒரு சிலர் குக்குகளாகவும் கமலேஷ், மோனிஷா பிளசி, ஜிபி முத்து உள்ளிட்ட சிலர் டூப் குக்குகள் ஆகவும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்த ரோபோ சங்கர் ஒரு சில வாரங்களில் எவிக்ஷனான அடுத்த சில நாட்களிலேயே காலமானார். அது அந்த நேரத்தில் பலரையும் வருத்தமடைய செய்தது. தான் வெளியே போகும்போது கூட மிகவும் பாசிட்டிவாக பேசி விட்டு போயிருந்தார். தான் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருவேன் என்று சொல்லி இருந்தார். பிறகு ஒவ்வொருவராக வெளியேற ஃபைனல் ஸ்டேஜ் வந்திருக்கிறது.

இதில் இறுதி எபிசோடுக்கான சூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதிலிருந்து சில தகவல்கள் கசிந்து இருக்கின்றன. அதன்படி நடுவர்களின் பாராட்டை வாங்கிய நடிகர் பெசன்ட் ரவி டைட்டில் வின்னராக செலக்ட் ஆகி இருக்கிறாராம். அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடம் பிரித்தாவிற்கு கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே நடிகர் ரவி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சென்னையில் ஒரு ஹோட்டலையும் நடத்தி வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தன்னுடைய ஸ்பெஷலான சாப்பாட்டை செய்து காட்டி அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டு இருந்தார். இப்போது அவர் பைனலில் அசத்தியதாக தெரிகிறது. இந்த எபிசோடு இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications