டாப் குக்கு டூப் குக்குவில் நடந்தது இதுதான்! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த சுஜாதா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சுஜாதா பேட்டி ஒன்றில் தான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் எப்படி டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
மதுரையைச் சார்ந்த பல நடிகைகள் சினிமாக்களிலும் திரைப்படங்களிலும் கிராமப்புற கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை சுஜாதாவும் ஒருவர். சினிமாவில் விருமாண்டி படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தாலும் பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது.

அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது விஜய் டிவியில் இருந்தபடியே சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். பைனலில் அவர் கதறி அழுதது இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
சுஜாதா வெற்றி பெற்றதும் டூப் குக்காக வந்த அருண் அழுத வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றி சுஜாதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில், ஆரம்பத்தில் இருந்து எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பிரவீன் பென்னட் சரவணன் மீனாட்சி சீரியல் எடுத்தபோது என்னை நடிக்க கூப்பிட்டார். நான் தான் சீரியலில் நடித்தால் சினிமாவிற்கு சரியாக டேட் கொடுக்க முடியாது என்று குழப்பத்தில் வேண்டாம் என்று சொன்னேன்.
பிறகு மகாநதி சீரியலில் நீங்க எந்த கேரக்டர் பண்ணுனாலும் நல்லா இருக்குன்னு அவர் சொன்னதால தான் அவரிடம் டேட் பிரச்சனையாகாமல் பார்த்துக்கோங்க என்று சொல்லி இருக்கிறேன். நான் எப்போதுமே இயல்பா நடிப்பேன் டைரக்டர் சொல்றதை அப்படியே உள்வாங்கி எனக்கு எனக்கேற்ற மாதிரி வெளிப்படுத்துவேன். அது தான் டைரக்டர்களுக்கு பிடித்திருக்கிறது.

நான் இப்போதும் என்னுடைய சொந்த ஊரான மதுரையில் தான் இருக்கிறேன். மீடியா மேஷன்ஸ் நிறுவனம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் போது என்னை கூப்பிட்டார்கள். அப்போ எனக்கு இந்த மாதிரி ஷோ பண்றது ஐடியாவே இல்ல. என்னை பொறுத்த வரைக்கும் எனக்கு வீட்டில் சமைக்கிற அளவுக்கு தான் தெரியும். பேக்கிங், டெஸர்ட் மாதிரியான விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரியாது.
நான் எப்போ என்ன செஞ்சாலும் அதை பெர்ஃபெக்டா செய்யணும்னு நினைப்பேன். அந்த மாதிரி இருந்தா தான் அதை பண்ணுவேன். நீங்க நல்லா சமைக்கலைன்னு சொல்லுவாங்க என்று நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது நீங்கள் வீட்டில் எப்படி இருப்பீர்களோ அப்படியே இருந்தால் போதும் என்று சொன்னார்கள். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
டைட்டில் வின் பண்ணுனது உண்மையாவே சந்தோஷமா இருந்தது. நான் ஜெயிச்சிடுவேன் என நம்பிக்கையில் தான் இருந்தேன். என்னை நடிகையாக பல கேரக்டரில் பார்த்திருப்பார்கள் ஆனால் இப்போது என்னுடைய திறமையை என்னால் நிரூபிக்க முடிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் ஒரு குடும்பம் போல தான் பழகி கொண்டிருந்தோம்.
சினிமாவில் நான் நடிகர்களுக்கு அம்மாவாக தான் நடித்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் நிஜத்தில் ஒரு அம்மா பிள்ளைகள் போலத்தான் எல்லோரும் பழகிக் கொண்டிருந்தோம். நரேந்திர பிரசாந்த் நானும் ஒரு அம்மா பையன் மாதிரி தான் இருந்தேம். அவன் டென்ஷன் ஆக மாட்டான். நாங்க ரெண்டு பேரும் டைட்டில் வின் பண்ணும்போது அருண் அழுதது உண்மையாவே வீட்டில் ஒருத்தங்க ஜெயிச்சா நமக்கு எப்படி இருக்குமோ அப்படியான உணர்வு தான் எங்க எல்லோருக்குள்ளும் இருந்தது என்று எமோஷனலாக அந்த பேட்டியில் சுஜாதா பேசி இருக்கிறார்.
சுஜாதா பைனலில் பெண்களின் 6 குணங்களை சொல்லும் வகையில் ஆறு விதமான சுவைகளில் சமைத்தது பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications