உச்ச ஹீரோவுக்கு வில்லன் நடிகரின் மனைவியிடம் "மையல்".. லாஸ்ட்ல டாப் ஹீரோ என்ன செய்தார்? இதுவே சினிமா
சென்னை: தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஹீரோயினுடன், ஹீரோவுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பேச வேண்டும்.. படம் முடியும்வரை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் முதல் அக்ரிமெண்ட்டாக உள்ளது.. எப்போதுமே படத்தின் ஹீரோவை யாரும் மாற்ற முடியாது.. ஆனால், அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டாடல் ஹீரோயினை மாற்றிவிடுவார்கள். திரைப்பட உலகில் இதை தவிர்க்க முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ரம்யா மோகன் என்பவர், நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார் கூறி பதிவிட்டிருந்தார்.

"பெண் ஒருவருக்கு தன்னுடைய கேரவனுக்கு வர விஜய் சேதுபதி 2 லட்சம் கொடுத்தார், உடன் driveக்கு வருவதற்கு 50 ஆயிரம் தந்தார். பல வருடங்களாக விஜய் சேதுபதி பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் தற்போது மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்" என ரம்யா மோகன் பதிவிட்டு, பிறகு அந்த பதிவினை நீக்கிவிட்டார்.
விஜய் சேதுபதி பதிலடி
இதையடுத்து, இந்த பாலியல் புகார் பற்றி விஜய் சேதுபதி கோபமாக பேசியிருந்ததுடன், தன்மீதான குற்றச்சாட்டையும் மறுத்தார்.. இந்த புகார் ஆதாரமற்றது, அசிங்கமான குற்றச்சாட்டு என்று பதிலடி தந்திருந்தார்.
"என்னை பற்றி கொஞ்சமாக தெரிந்தவர்களுக்கு கூட இந்த புகார் உண்மை இல்லை என தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள்.. தன்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக அந்த பெண் இப்படி செய்திருக்கிறார். சில நிமிடங்கள் புகழ் அவருக்கு இதனால் கிடைக்கிறது.இது பற்றி தற்போது சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கிறேன்" என்றும் விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்
அட்ஜெஸ்ட்மென்ட் சினிமா
இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து, நடிகை சனம் ஷெட்டி கூறும்போது, "சினிமாவில் இப்படியான பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கத்தான் செய்கிறது. இதனால் நடிகைகளுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுகிறது.. திறமைசாலிகள் பலரும் ஒதுக்கப்படுகிறார்கள்" என்று வேதனையாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கு தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், "சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது.. ஹீரோயினாக ஒரு படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு, ஹீரோவிடம் அந்த பெண் கமிட் ஆக வேண்டும்..
இதுகுறித்து தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட ஹீரோயினுடன் அட்ஜெஸ்ட்மென்ட் பேச வேண்டும்.. படம் முடியும் வரை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் முதல் அக்ரிமெண்ட்டாகவே பலரும் வைத்திருக்கிறார்கள்.. படத்திலிருந்து ஹீரோவை யாரும் மாற்ற முடியாது.. ஆனால், அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டாடல் ஹீரோயினை மாற்றிக் கொள்ளலாம். திரைப்பட உலகில் இது தவிர்க்க முடியாது..
அன்றைய காலகட்டத்தில், ஒரு டாப் ஹீரோ, தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை, அந்த படம் முடியும் வரை தன்னுடனேயே தங்கியிருக்க சொல்வாராம்.. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்ததுமே, சம்பந்தப்பட்ட ஹீரோயினை அழைத்துக் கொண்டு ஸ்டார் ஓட்டலுக்கே சென்றுவிடுவார்.
ஒருநாள் அந்த டாப் ஹீரோ, அப்போது பிரபலமாக இருந்த ஒரு வில்லன் நடிகரின் மனைவியை விழா ஒன்றில் சந்தித்தார்.. அந்த பெண் சினிமாவை சேர்ந்தவர் இல்லை.. சாதாரண குடும்ப பெண்தான்.. அவரை நேரில் பார்த்ததுமே இந்த டாப் ஹீரோ, மையல் கொண்டார்.. உடனே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி வில்லன் நடிகரிடமே பேசுகிறார்..
வில்லன் நடிகரின் மனைவி
இதைக்கேட்டதும் வில்லன் நடிகர் அதிர்ச்சி அடைந்து, மறுப்பு சொல்லிவிட்டார். உடனே கோபப்பட்ட டாப் ஹீரோ, தயாரிப்பாளரை அழைத்து, தான் நடிக்கும் படங்களில் அந்த வில்லன் நடிகரை இனிமேல் புக் செய்யக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த வில்லன் நடிகர், மதுவுக்கு அடிமையாகிவிட்டார்.
தற்கொலை தம்பதி
24 மணி நேரமும் குடித்து கொண்டேயிருந்தார்.. இதைப்பார்த்து கவலைப்பட்ட மனைவி, கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளானார்..
ஒருகட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு நெருப்பை வைத்துக் கொண்டார்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வில்லன் நடிகர், இதுக்கெல்லாம் காரணம் தான்தானே? என்று சொல்லி, அவருடன் ஓடிச்சென்று மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டார்,.. கடைசியில் இருவருமே தீயில் கருகி இறந்துவிட்டனர்,.
இவர்கள் இறந்தபிறகுதான், இதுக்கெல்லாம் காரணம், அந்த டாப் ஹீரோ என்பது ஒட்டுமொத்த சினிமாவுக்கும் தெரியவந்தது.. இந்த குற்ற உணர்ச்சியில், அந்த தம்பதியரின் குழந்தையை தானே வளர்ப்பதாக டாப் ஹீரோ சொன்னார்..
ஆனால், கணவன்-மனைவி மரணத்துக்கே நீதானே காரணம் என்று சொன்ன உறவினர்கள். அவரிடம் குழந்தையை தராமல், தாங்களே வளர்த்தனர்.. இப்படியெல்லாம் இந்த சினிமா துறையில் நடந்துள்ளது.. பாகவதர் காலத்திலிருந்தே இப்படித்தான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications