டூரிஸ்ட் ஃபேமிலி நாட்டிலேயே அதிகமான வசூல் படைத்து சாதனை.. வெறும் ரூ.7 கோடியில்.. யோகி பாபுவும் சபாஷ்
சென்னை: அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு உட்பட பலரும் நடித்து வெளிவந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி... ரிலீஸ் ஆனதிலிருந்தே, பல தரப்பினரின் சிறப்பான விமர்சனத்தை இந்த படம் பெற்று வருகிறது.. தியேட்டர்களில் ஓடி, பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆனதுமே, இந்த படத்துக்கான வரவேற்பு இன்னும் அதிகமாகிவிட்டது.. இந்நிலையில், 2025ம் ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் அதிக லாபத்தை அள்ளிய படமாக டூரிஸ்ட் பேமிலி படம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த தகவல்தான் கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பற்றி பேசியபோது, "புலம்பெயர்ந்து வாழ்வது என்றாலும், குடும்பமாக வாழ்வதற்கும், பேச்சிலராக வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது..

இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை.. புலம்பெயர்ந்து வந்து இங்கு பழகும்போது, சின்ன சின்ன விஷயங்களையும் , நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் அபிஷன் ஜீவிந்த்.
யோகி பாபு சூப்பர்
மொழி என்பது பெரிய விஷயமில்லை,, அன்பு மட்டுமே முக்கியம் என்பதை பதிவு செய்துள்ளார்.. இப்படத்தில் வரும்நாய்கூட, அன்பு எங்கிருக்கிருக்கிறதோ, அவர்களையே தேடி வந்துவிடுகிறது.
யோகிபாபு 3 காட்சிகள் மட்டுமே வருகிறார்.. ஆனால், படத்தை தூக்கி நிறுத்திவிட்டார் என்றே சொல்லலாம்.. கடைசியில் யோகிபாபுவை காட்டாமல், பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே முடித்துகொண்டதுபோல் காட்டியிருப்பது, இயக்குனரின் புத்திசாலித்தனம்.
ஹை பட்ஜெட் படங்கள்
ஹை பட்ஜெட்டில் எடுக்கப்படும் பல படங்கள் இங்கே மண்ணை கவ்வும்போது, இந்த படம் அமைதியாக உள்ளது.. பல வருடங்கள் கழித்து, குழந்தைகளுடன் பலரும் தியேட்டர்களுக்கு செல்வதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
ஹை பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மண்ணை கவ்வும்போது, குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நடிகர், நடிகைகளை வைத்து நுணுக்கமான, மென்மையான விஷயங்களை 24 வயதே ஆன இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் பதிவு செய்திருக்கிறார்.. உலக அளவில் இந்த படம் அனைவருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தரும்.. அனைத்து விருதுகளுக்கும் தகுதியுடைய படம்" என்று உயர்வாக பேசியிருந்தார்.
ரூ.1000 கோடி வசூலுக்கு சமம்
அதேபோல பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேறொரு சேனலுக்கு தந்திருந்த பேட்டியில், "1000 கோடி எடுக்கணும்னு எல்லாரும் ஆசைப்படறாங்க, அதுக்கேத்த கதை வேணும்தானே? 500 கோடியில் தக் லைஃப் படத்தை எடுத்துவிட்டு , அதில் தம்மாத்துண்டு கதையைகூட காணோம்.. ஆனால், வெறும் 4 கோடியில் எடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி இப்போதே 75 கோடி ரூபாய் வசூலிக்கிறது.. இது 1000 கோடி வசூலித்ததற்கு சமமாகும்" என்றார்..
அந்தவகையில், அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்ற படமாக டூரிஸ்ட் ஃபேமிலி அமைந்து வருகிறது.. கடந்த மே மாதம் வெளியான இப்படம் தற்போதுவரை மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது..
நாட்டிலேயே அதிக வசூல்
இப்படிப்பட்ட சூழலில், 2025 பாதி வருடங்களை கடந்திருந்தாலும், இதுவே அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் டூரிஸ்ட் ஃபேமிலி இடம்பெற்றுள்ளது.
அதாவது, வெறும் 7 கோடி ரூபாயில் உருவான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம், சுமார் 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து நடப்பாண்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த இந்தியப் படமாக சாதித்துள்ளது . 7 கோடியில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் கிடைத்த லாபம் மட்டுமே ரூ.90 கோடியாகும்.. அதாவது முதலீட்டு தொகையை விட 1200 சதவீதம் அதிகமாகும்..
2025ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில் எந்த ஒரு படமும் இப்படியான வசூல் சாதனையை பிடித்தது இல்லை என்கிறது சாக்நில்க் என்ற நிறுவனம். இந்த நிறுவனம், திரைப்படங்களின் தரவுகள் பற்றிய விவரங்களை வெளியிடும் ஒரு நிறுவனம் ஆகும். 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி என்பதுதான், தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாகும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications