Tourist family OTT update: டூரிஸ்ட் பேமிலி ஓடிடி உரிமத்தை வாங்கிய நிறுவனம்.. அதுவும் இத்தனை கோடியாம்!
சென்னை: நடிகர் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடித்து அபிஷன் ஜீவித் இயக்கத்தில் கடந்த மே ஒன்றாம் தேதி தியேட்டரில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஓடிடிக்கு இந்த திரைப்படம் எப்போது வரப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சசிகுமார் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே கதை வித்தியாசமாகவும் ரசிகர்களால் பாராட்டப்படும் வகையில் இருக்கிறது. அயோத்தி திரைப்படத்திற்கு பிறகு அதைவிட சூப்பரான வெற்றிக் கொடுக்கும் வகையில் ஒரு திரைப்படத்தில் சசிகுமார் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இப்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலமாக அது நிறைவேறி இருக்கிறது.

ரிலீஸ்
சசிகுமார் நடிப்பில் மே ஒன்றாம் தேதி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை அபிஷன் ஜீவித் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். இவர்களோடு எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார்.
ரெட்ரோ படத்திற்கு போட்டி
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படத்திற்கு போட்டியாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் கலெக்ஷன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் டிரைலர் வெளியான போது இந்த திரைப்படத்திற்கு நல்ல பாராட்டு கிடைத்து வந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஸ்பெஷல் ஷோ பார்த்த பல திரை பிரபலங்கள் இந்த படத்தை ஆகா ஓகோ என்று பாராட்டி இருந்தனர். இதனால் இந்த படத்திற்கு ஓவர் ஹைப்பும் உருவாகி இருந்தது.
பாராட்டு
இதற்கு முன்பு இதுபோன்று சில திரைப்படங்களை பார்த்துவிட்டு பிரபலங்கள் பாராட்டுவாங்க இருந்தாலும் கடைசியில் மொக்கை வாங்கியிருக்கிறது. ஆனால் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பிரபலங்கள் கொடுத்த ஹைப்புக்கு தகுந்ததாகதான் இருக்கிறது என்று ரசிகர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். முதல் நாளே இந்த திரைப்படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் கிடைத்திருக்கிறது.
டூரிஸ்ட் பேமிலி முதல் நாள் வசூல்
தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 1.6 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. இது சசிகுமாரின் ஹீரோவாக அவர் நடித்த அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. அதுபோல இந்த திரைப்படம் உலக அளவில் 2.5 கோடி வரை வசூல் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படம் வெறும் ஏழு கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளது.

ஓடிடி அப்டேட்
இந்த திரைப்படம் வசூல் நிலவரத்தை பார்த்தால் இந்த வாரத்திற்குள் படத்திற்கான செலவை வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 13 கோடிக்கு வாங்கி உள்ளது. இந்த திரைப்படம் மே மாதத்தின் இறுதி வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications