Tourist Family OTT: ஓடிடிக்கு அனுப்பப்பட்ட “டூரிஸ்ட் ஃபேமிலி” ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சர்ப்ரைஸ் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கடந்த மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், கமலேஷ், மிதுன் ஸ்ரீ, ஜெய்சங்கர், ரமேஷ் திலக் போன்ற பலருடைய நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெறும் 24 வயது உடையவர் என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று கூட இந்த திரைப்படத்தை பற்றி நடிகர் தனுஷின் அப்பாவும் இயக்குனர் கஸ்தூரிராஜா பெருமையாக பேசி இருந்தார்.

OTT release Sasikumar Tourist Family

இயக்குனர் கஸ்தூரி ராஜா பாராட்டு

இப்போதுள்ள பல இயக்குனர்கள் கொரியன், ஜப்பான் படங்களை பார்த்து கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் கதை எந்த இடத்தில் என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெறும் 24 வயது உள்ளவர் என்பதை நம்பவே முடியவில்லை. உதவி இயக்குனராக கூட பணியாற்றாமல் அவர் அழகாக கதையை சொல்லி இருக்கிறார். இதுபோல புதுமையாக எல்லோரும் யோசிக்க வேண்டும் என்று கஸ்தூரிராஜா பேசி இருந்தார்.

நடிகர்களின் பாராட்டு

அதுபோல ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி இருந்தனர். இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் சந்திக்கும் சவால்களை காமெடி கலந்த உணர்வுபூர்வமாக கதையாக சொல்லப்பட்டு இருக்கிறது. படம் வெளியாகி நான்கு வாரங்களை கடந்த போதிலும் இந்த திரைப்படத்தின் ஹவுஸ் புல்லாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி பட்ஜெட்

சுமார் ஏழு கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் மூன்று வாரங்களில் 10 மடங்கிற்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது. அதாவது 75 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக பட குழுவினர் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் எப்போது ஓடிடிக்கு வரும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.

OTT release Sasikumar Tourist Family

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி

அதாவது டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை நீங்க பார்த்தீட்டீங்களா நண்பர்களே? இல்லை ஓடிடியில் பார்ப்பதற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+