விமர்சனம் ஒரு பக்கம்.. 4 நாளில் டாக்ஸிக் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: யஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான டாக்ஸிக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கதை, திரைக்கதை, வன்முறை, ஆபாசம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் மட்டும் படம் ஓரளவிற்கு நல்ல வசூலை சென்று கொண்டிருக்கிறது.

முதல் நாள் வசூல்

ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியான டாக்ஸிக் முதல் நாளே இந்தியாவில் 101.10 கோடி நெட் வசூல்செய்ததாக சாக்நிக் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளில் 37.65 கோடியும், மூன்றாவது நாளில் 27.20 கோடியும் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் மூன்று நாட்களிலேயே இந்திய நெட் வசூல் 166 கோடியை நெருங்கியது. சனிக்கிழமையான நேற்று 4வது நாளில் படம் இந்தியாவில் சுமார் 24.50 கோடி நெட் வசூல் செய்துள்ளதாக சாக்நிக் தெரிவித்துள்ளது.

Toxic

நான்கு நாள் வசூல் நிலவரம்

இதன் மூலம் 4 நாட்களில் இந்திய நெட் வசூல் 190.45 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உலக அளவில் படம் 4 நாட்களில் 254.75 கோடி வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது படம் வெளியான 4 நாட்களிலே 250 கோடி கிளப்புக்குள் சென்று விட்டது என்று கூறப்படுகிறது. டாக்ஸிக் படத்தின் இந்தி பதிப்பும் வசூல் முக்கிய பங்கு வகிக்கிறது. 4 நாட்களில் இந்தி பதிப்பு மட்டும் 100 கோடி நெட் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதான் இப்போது படக்குழுவுக்கு பெயர் மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

கன்னடத்தில் யஷ்ஷுக்கு இருக்கும் மாஸ் வரவேற்பு ஒரு பக்கம் என்றால் இந்தி மார்க்கெட்டில் கேஜிஎப் மூலம் உருவான அவரது ரசிகர் கூட்டம் இன்னும் குறையவில்லை என்பதை வசூல் காட்டுகிறது. முதல் நாள் 100 கோடி என்ற பிரமாண்ட ஓப்பனிங்க்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகமாக குறைந்து இருக்கிறது. 2வது நாளில் 37.65 கோடி, 3வது நாளில் 27.20 கோடி, 4வது நாளில் 24.50 கோடி என வசூல் கீழே வந்துள்ளது. அதனால் தான் டாக்ஸிக் படத்துக்கு முக்கியமான கேள்வி 300 கோடி வசூல் எட்டுமா என்பது இல்லை. இந்த வேகம் இனி எவ்வளவு நாள் தொடரும் என்பதுதான்.

அடுத்த வாரத்தில் நிலை

ஏனென்றால் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களில் மவுத் ரிவியூ இனி எப்படி இருக்கிறது என்பதுதான் அடுத்த வாரம் வசூலை தீர்மானிக்கும். கேஜிஎப் 2 படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 4 வருஷம் கழித்து யஷ் திரையில் வந்திருக்கிறார். அதனால் அவரது ரசிகர்களிடம் இருந்து எதிர்பார்ப்பு படத்தில் முதல் நாள் வசூலில் அப்படியே தெரிந்தது. இப்பொழுது 4 நாட்களில் உலக அளவில் 254 கோடி வசூல் என்ற நிலையில் படம் உள்ளது. விமர்சனங்களை தாண்டியும் இந்த அளவுக்கு வசூல் இருப்பது யஷ்ஷின் மார்க்கெட்டை மீண்டும் நிரூபித்திருக்கிறது. விமர்சனங்கள் டாக்ஸிக்கை காயப்படுத்தினாலும்... பாக்ஸ் ஆபிஸ் இன்னும் டாக்ஸிக் தான் கெத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+