ஹை பட்ஜெட் பிட்டு படமா? ட்ரோல் ஆகும் டாக்ஸிக்.. பழைய பேட்டியில் இயக்குனர் என்ன சொல்லி இருக்காங்க!
சென்னை: யாஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான டாக்ஸிக் திரைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பக்கம் வசூல் காரணமாகவும், இன்னொரு பக்கம் விமர்சனம் காரணமாகவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் கதை, திரைக்கதை, நீளம், அதிகப்படியான வன்முறை மற்றும் கிளாமர் காட்சிகள் குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே இயக்குனர் கீது மோகன் தாஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய வீடியோ ஒன்று திடீரென இணையத்தில் சுற்றி வருகிறது. அந்த வீடியோவில் சொன்ன கருத்து பார்த்து இப்போதுதான் புரிகிறது டாக்ஸிக் எப்படி உருவானது என்று என நெட்டிசன்கள் தங்களுக்கு.

டாக்ஸிக் பட இயக்குனர் பேட்டி
அந்த பேட்டியில் கீது மோகன்தாஸ் பேசுகையில், நான் ஒரு கதையை எழுதும் போது வேறு ஒன்று எழுதுவேன், ஆனால் திரையில் வேறு ஒன்றை எடுத்து வைப்பேன். படப்பிடிப்பில் சில விஷயங்கள் மாறும். அதனால் எடிட்டிங் சென்ற பிறகு மீண்டும் பழைய மாற்றம் நடந்துவிடும். கடைசியில் படம் வந்த பிறகு சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார். இதைத்தான் இப்போ அந்த நெட்டிசன்கள் நான் உன்னை எழுதிய ஸ்கிரிப்ட்டை நானே பார்க்கவே மாட்டேன் என்று சொல்லியிருக்காங்க, அப்படித்தான் யாஷ்ஷிடம் ஒரு கதையை சொல்லிவிட்டு அவரை வைத்து இப்படி ஒரு படத்தை எடுத்து வச்சிருக்கீங்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நெட்டிசன்கள் கலாய்
இன்னும் சில நெட்டிசன்கள் மேடம் எழுதுனது ஒன்று, எடுத்தது ஒன்று, எடிட் செய்தது, ஒன்று கடைசியில் எங்களுக்கு கிடைத்தது டாக்ஸிக் என்று சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டமாறன் இந்த படத்தை பார்த்து இது ஹை பட்ஜெட் பிட்டு படம் மாதிரி இருக்கு என்று கலாய்த்து இருந்தார். அதே கருத்தை சோசியல் மீடியாவில் பல ரசிகர்களும் சொல்லி இருந்தனர்.
மீம்ஸ்கள்
இதற்கு முந்தைய படங்களில் யாஷ்ஷின் நடிப்பையும், ஆக்சன் பிரம்மாண்டத்தையும் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் இந்த படத்தில் அவர் இவருக்கு அதிகப்படியான புகை பிடிப்பது காட்சிகள், மது அருந்தும், காட்சிகள் அடுத்தவர்களை வெட்டுவது, கொலை செய்வது போன்ற காட்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. கடைசி வரை படத்தின் கதை என்னவென்றே புரியவில்லையே என்றெல்லாம் புலம்பி வருகிறார்கள்.
டாக்ஸிக் படத்தின் கதை
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலே ஓடும் படத்தில் மீண்டும் மீண்டும் வந்த காட்சிகள் தான் ரிப்பீட்டு மோடில் வருகிறது. ஒரு ஹீரோயினி வருகிறார் அவருடன் ஹீரோ உடலுறவு கொள்கிறார். பிறகு அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை இவருக்கும் வில்லனாக வருகிறது, தன் கையாலே ஹீரோ லட்சக்கணக்கானோர்களை கொன்று குவிக்கிறார். பலரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். இந்த துப்பாக்கிகளை எல்லாம் சேர்த்து வைத்திருந்தால் இந்தியாவிற்கு துப்பாக்கி தட்டுப்பாடு வராது என்றெல்லாம் மீம்ஸ்கள் பரப்பி பரப்பி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் ஒரு படிக்கு மேலே போய் ஒரு பெண் இயக்குனர் படத்தை இயக்குகிறார் என்றால் ஒரு கண்ணியம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் கடைசியில் பிரம்மாண்ட படங்களில் நடித்து பெயர் வாங்கிய யாஷ்ஷை ஒரு பிட்டு படத்தில் நடித்திருக்கிறார் என்று பெயர் வாங்கி கொடுத்து விட்டாரே என்று சிலர் நொந்து கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
