ஓடிடியில் வந்த யஷ்ஷின் டாக்ஸிக்.. வீட்டில் பார்த்தால் படம் வேற மாதிரி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: யஷ் படம் என்றாலே ரசிகர்கள் அதை ஒரு சாதாரண படமாக பார்க்க மாட்டார்கள். கேஜிஎப் படங்களுக்கு பிறகு அவருடைய அடுத்த படம் எப்போது வரும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்த்துக் கொண்டாருந்தார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் தான் டாக்ஸிக். இந்த படம் தியேட்டரில் அதிகமான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் இப்போது ஓடிடிக்கு வருகிறது. அதற்கான அப்டேட் வெளியாகியிருக்கிறது.

டாக்ஸிக் ஓடிடி அப்டேட்

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் வந்த படத்துக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் வந்த சூழ்நிலையில் படம் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. அதாவது வரும் செப்டம்பர் 25ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் டாக்ஸிக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Toxic OTT release

டாக்ஸிக் கதை

நெகட்டிவ் கமெண்ட் காரணமாக குடும்பத்தோடு இந்த படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனவர்களுக்கு இப்போ வீட்டிலேயே பார்க்க வாய்ப்பு வந்துவிட்டது. டாக்ஸிக் என்ற பெயரை வைத்து இது சாதாரண படம் இல்லை என்பது தெரிந்துவிடும். கதை சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் அதற்கு பிந்தைய காலகட்டத்தை சேர்ந்த கோவாவை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யஷ் இரண்டு கேரக்டரில் நடித்திருக்கிறார் ராயா மற்றும் அவரது மகன் டிக்கெட் என 2 கேரக்டர்களில் அவர் வருகிறார்.

படத்தின் நீளம்

கேஜிஎஃப் படங்களில் ராக்கி பாய் என்ற கேரக்டரில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய பிறகு யஷ் எந்த மாதிரியான கதையை தேர்வு செய்வார் என்ற கேள்வி இருந்தது. ஆனால் கேஜிஎஃப் மாதிரியான ஒரு படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு டாக்ஸிக் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. டாக்ஸிக் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 14 நிமிடங்கள். அதுபோல அந்த படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்கள் கருத்து

இதனால் படம் தியேட்டரில் பார்த்தவர்களுக்கு படத்தின் நீளம் பற்றி கருத்துக்கள் இருந்தது. சில விமர்சனங்களில் கதையில் அதிகமான வன்முறை தன் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. அதனால் ஓடிடி ரிலீஸில் இதை மாற்றம் செய்து வெளியிடுவார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். தியேட்டரில் 3 மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியாதவர்கள் வீட்டில் பார்த்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தியேட்டரில் படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்தை சொல்லி விட்டார்கள். இனி ஓடிடியில் பார்க்க போகும் ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதுதான் அடுத்த சுவாரசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+