திரிஷா பற்றி தெரியுமா? நல்லா, அழுது ஏமாற்றுவாங்க.. ரம்யா கிருஷ்ணன் சீண்டும் வீடியோ வைரல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகைகள் திரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையேயான நட்பு ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று. பல வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்து வரும் நிலையில் திரிஷா பற்றி ரம்யா கிருஷ்ணன் பேசிய பழைய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

Trisha Ramya Krishnan Kollywood

ரம்யா கிருஷ்ணன் பேசிய பழைய வீடியோ

இந்த வீடியோவில், ஒரு டிவி நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் திரிஷாவைப் பற்றி மிகவும் காமெடியாகவும், ஓபனாகவே பேசியிருப்பது தான் இப்போது வைரலாகும் காரணம். அந்த வீடியோவை சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த திரிஷாவும் அதையே ரீஷேர் செய்ததால் ரசிகர்கள் கவனம் முழுவதும் அந்த வீடியோ மீது திரும்பியுள்ளது.

Trisha Ramya Krishnan Kollywood

ரம்யா கிருஷ்ணன் கலாய்ப்பு

அந்த பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, "திரிஷா பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாங்க... பேசிக்கிட்டே இருப்பாங்க. அதே மாதிரி, அவங்களுக்கு எப்போ வேண்டுமானாலும் கண்ணீர் வரவைக்க முடியும். அப்படி அழுதுகிட்டு பலரையும் ஏமாத்தியிருக்காங்க!" என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

திரிஷா பதிலடி

அதற்க்கு பக்கத்துல இருந்த திரிஷா உடனே ரியாக்ட் பண்ணுறாங்க, "நான் அழும்போது ரம்யா மட்டும் தான் சிரிப்பாங்க... நான் ரொம்ப ஃபீலிங்கோட பேசினாலும் 'இதெல்லாம் ஃபீலிங் கிடையாது... டிராமா!'ன்னு சொல்லி கலாய்ப்பாங்க!" என்று சிரித்தபடியே சொல்லுகிறார். இருவருக்கும் நடுவில் நடந்த இந்த லைட்-ஹார்ட்டான கலாய்ப்பு தான் ரசிகர்களுக்கு ரொம்ப ரியலாக இருக்கிறது.

Trisha Ramya Krishnan Kollywood

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

"நான் அழுதா இவர் விழுந்து விழுந்து சிரிப்பாங்க"ன்னு திரிஷா சொல்வதும், "இவங்க இங்கிலீஷில் பேசுறதை தமிழ்ல பேச முடியாதா?"ன்னு ரம்யா கேட்பதும் இந்த சின்ன சின்ன டயலாக்ஸ்தான் வீடியோவை இன்னும் ரசிக்க வைக்குது. இந்த வீடியோ வெளியானதும், ரசிகர்கள் கமெண்ட்ஸ்ல கலக்க ஆரம்பிச்சுட்டாங்க.

"அடடா... த்ரிஷா அவ்வளவு பேசுவாரா?", அவங்க பிடித்தவங்களை அழுது ஏமாத்திருவாங்களா.. அப்படி பார்த்தா பொது நிகழ்ச்சிகளில் திரிஷா அதிகமாக அழுததே கிடையாது என்றும் "திரிஷா சமத்து பிள்ளையா இருக்கணும், இனிமேல் அழக்கூடாது!" என கலாய்த்து கமெண்ட்ஸ் குவிகிறது.

திரிஷா பற்றிய சர்ச்சைகள்

திரிஷா சமீப காலமாக நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்கவில்லை. அவருடைய கேரக்டர் அதிகமாக ட்ரோல் செய்வது போலவும், ரசிகர்கள் விரும்பாதது போலத்தான் இருக்கிறது. இதனால் இவர் நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

Trisha Ramya Krishnan Kollywood

திரிஷா பதிலடி

அதே நேரத்தில் கருப்பு திரைப்படத்திற்கு பிறகு திரிஷா எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என்பதால் அவர் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற சர்ச்சைகளும் பரவி வந்தது. அதற்கு திரிஷா காட்டமாக பதில் கொடுத்திருந்தார். "நான் சினிமாவை விட்டு போறேன்னு நீங்க பார்த்தீங்களா?"ன்னு ஒரு ஸ்டோரி போட்டு ரசிகர்களை குளிர்வித்தார். ஏற்கனவே பலமுறை, "உயிர் இருக்கும் வரை நடிப்பேன்"ன்னு சொல்லியிருக்கிறவர் என்பதால், இந்த வதந்தி பெரிய அளவில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

திரிஷா இன்ஸ்டா போஸ்ட்

திரிஷா நடிகர் விஜய்யுடன் ஒரு கல்யாண பங்க்ஷனில் மேட்சிங் உடையில் கலந்து கொண்டது பெரிதாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு திரிஷா இன்ஸ்டா போஸ்டில் என்ன சொல்லப் போகிறார் என்று பார்ப்பதற்காக ரசிகர்கள் அதிகமாக காத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது அவர் ரம்யா கிருஷ்ணன் தன்னைப் பற்றி பேசிய வீடியோவை பகிர அதை பார்க்கும் பலர் ஹார்டின் பறக்க விட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+