உதயநிதி சர்ச்சைக்கு மத்தியில் திரிஷா எடுத்த முடிவு..! இதுதான் பதிலா? ரசிகர்கள் கேட்கும் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலை பரபரப்பாகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் இந்த விவகாரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது திரிஷாவின் பதிலைத்தான். ஆனால் அவர் மட்டும் சோசியல் மீடியாவில் தன்னுடைய கருத்து எதையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்ச்சை பேச்சு

காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்த சிலர் திரிஷா.. திரிஷா.. என்று கத்தி கொண்டு இருந்தனர். அப்போது அவர் தண்ணீர் பற்றி பேசியது இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக விஜய் மற்றும் திரிஷா இரு வரையும் இணைத்து அவர் பேசியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

Trisha Udhayanidhi Stalin vijay

உதயநிதி கைது

இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் மட்டும் நின்றுவிடாமல் உதயநிதி மீது புகார், அரசியல் வழக்குகள், விமர்சனங்கள் என அடுத்தடுத்த கட்டத்திற்கு போனது பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டு அவரை கைது செய்து இருந்தது. இது தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் இந்த சர்ச்சையின் மையத்தில் பேசப்பட்ட திரிஷா மட்டும் அமைதியாக இருப்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

திரிஷா பதிவு

பொதுவாக திரிஷா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருப்பார். தினமும் வீடியோக்கள், பயண அனுபவங்கள், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், நண்பர்களுடன் எடுத்த போட்டோஸ்கள், வாழ்க்கை குறித்த தத்துவ வாசகங்கள் என்று தொடர்ந்து ஏதாவது ஒன்றை பகிர்ந்து கொண்டே இருப்பார். அவரைப்பற்றி சர்ச்சைகள் எழுந்தாலும் பலமுறை பதிலடி கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் கூட நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசிய கருத்து இணையத்தில் பேசப்பட்ட போது அதற்கு திரிஷா இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி கொடுத்தது பெரிதாக பேசப்பட்டது. அதேபோல சில நாட்களுக்கு முன்பு விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பேசிய பேட்டி இணையத்தில் வைரலான சமயத்தில் கூட, இப்போது எங்கு சென்றாலும் சில நிமிடங்கள் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது, அதற்குப் பிறகு எப்போது வீட்டுக்கு போகலாம் என்று தான் தோன்றுகிறது என்று ஒரு தத்துவ பதிவை வெளியிட்டு இருந்தார்.

பதில் இன்னும் வரவில்லை

அந்த பதிவு எதற்காக? என்ற கேள்வியும் அப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இப்போது நிலைமை வேறு... கடந்த 2 நாட்களாக திரிஷாவை மையமாக வைத்து தமிழகம் முழுவதும் விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் பெண்களை இதுபோல அரசியல் விவாதங்களில் இழுக்க கூடாது என்று கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் வழக்கமாக தினமும் ஸ்டோரி போடும் திரிஷா இந்த 2 நாட்களாக இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ரசிகர்களுக்கு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க போகிறாரா? அல்லது சரியான நேரத்தில் பதில் சொல்வதற்காக காத்திருக்கிறாரா? அல்லது இந்த சர்ச்சை முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துவிட்டாரா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+