விஜய், திரிஷா பிரச்சனையில் குஷ்பு உடைத்த ரகசியம்.. எனக்கு நல்லாவே தெரியும்.. ஓபனாக சொன்ன வார்த்தை!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தொடர்ந்து மின்னி வரும் திரிஷா, தற்போது தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கி பேசப்பட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து பிரச்சனை எழுந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
அதில், விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டதால், எந்த ஆதாரமும் இல்லாமல் சிலர் திரிஷாவை இதற்கு இணைத்து பேச ஆரம்பித்தனர்.

பழைய வதந்தி மீண்டும் வைரல்
விஜய் - திரிஷா இணைந்து நடித்த படங்களின் புகைப்படங்கள், திருமண நிகழ்ச்சிகளில் எடுத்த வீடியோ போன்றவை மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனால், "இது உண்மையா?" என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளிவராத நிலையில், இந்த விவகாரம் முழுக்க முழுக்க வதந்தி என்றே பலரும் கூறி வருகின்றனர்.
குஷ்பு நேரடி ரியாக்ஷன்
இந்த சர்ச்சை குறித்து நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ ஓபனாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: "இப்போ காலத்தில் சின்ன விஷயங்களையும் பெரிய விஷயமாக மாற்றி பேசுறது ரொம்ப அதிகமா ஆகிடுச்சு. உண்மை என்னன்னு பார்க்காமே தீர்ப்பு சொல்லுறாங்க" என்று தெரிவித்தார்.
திரிஷா அப்படிப்பட்டவர் இல்ல
திரிஷாவை பற்றி பேசும்போது குஷ்பு, " விஜய் மற்றும் திரிஷா பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. திரிஷா ரொம்ப மரியாதையான பெண்... மென்மையான மனசு கொண்டவர். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று தெளிவாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பிரிவு
இந்த விவகாரம் ரசிகர்களிடையே கூட இரு விதமான எதிர்வினையை உருவாக்கியுள்ளது. ஒரு பக்கம் - "இது எல்லாம் பொய்யான வதந்தி" என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் - திரிஷாவை குறிவைத்து விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது.
விஜய் குடும்ப சர்ச்சை, அரசியல் பேச்சு, ரசிகர்கள் எதிர்வினை - இவை அனைத்தும் சேர்ந்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த எல்லா சத்தத்துக்கும் நடுவில் அமைதியாக தனது வேலையை செய்து கொண்டு இருக்கும் திரிஷாக்கு தற்போது பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை












Click it and Unblock the Notifications