விஜய் பஞ்சாயத்துக்கு இன்ஸ்டாவில் முற்றுப்புள்ளி வைத்த திரிஷா.. இதுதான் பதிலடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலமாக நடிகை திரிஷாவின் சோசியல் மீடியா போஸ்ட்டுகள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதோடு அடிக்கடி சர்ச்சைகளிலும் அதிகமாக சிக்கிக்கொண்டிருக்கும் திரிஷா பற்றி இப்போது சில விஷயங்களை ரசிகர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அதுவும் விஜய் பற்றிய வதந்திகளுக்கு பதிலடியா என்ற வகையில் கேள்விகள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Trisha Vijay Tamil Cinema

திரிஷா பாலோ செய்யும் நபர்கள்

நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கு இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், அவர் யாரையும் ஃபாலோ செய்யாதது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதற்கு நேர்மாறாக திரிஷா சுமார் 293 பேரை ஃபாலோ செய்து வருகிறார். அதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், நண்பர்கள் என நீளமான பட்டியல் இருந்தாலும், அதில் விஜய் இல்லாதது தான் ரசிகர்களை அதிகமாக யோசிக்க வைத்திருக்கிறது.

புரியாத புதிர்

இதில் மேலும் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், திரிஷா விஜய்யை மட்டுமல்லாமல், 'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்து நடித்த சீயான் விக்ரம், கார்த்தி, ரவி மோகன் போன்றவர்களையும் ஃபாலோ செய்யவில்லை. இதனால் "இதற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்கிறதா?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

சில ரசிகர்கள் இதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டாலும், மற்றொரு பக்கம் "சமீபத்தில் விஜய் - திரிஷா குறித்து வரும் கிசுகிசுக்கள், விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் இது ஒரு மறைமுக பதிலா?" என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக இருவரின் நட்பு, இணைந்து நடித்த படங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவை காரணமாக, இந்த 'ஃபாலோ' விஷயம் கூட பெரிய பேச்சாக மாறியுள்ளது.

திரிஷா போஸ்ட்

இதே நேரத்தில், திரிஷா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "லவ் இல்லாமல் எதற்கும் அர்த்தம் இல்லை" என்று போட்ட பதிவு கூட ரசிகர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த 'லவ்' என்பது காதலா? நட்பா? குடும்ப அன்பா? அல்லது அவர் மிகவும் நேசிக்கும் செல்லப்பிராணிகளுக்கான அன்பா? என்று பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், திரிஷா எப்போதும் "என் வாழ்க்கையில் யாருடைய காதலையும் பிரிக்கவில்லை, சேர்த்து தான் வைத்திருக்கிறேன்" என்று கூறியவர். அப்படி இருக்கும் போது, அவர் சில நெருங்கியவர்களை ஃபாலோ செய்யாதது கூட ரசிகர்களுக்கு புதிராகவே உள்ளது.

Trisha Vijay Tamil Cinema

தனிப்பட்ட உரிமை

ஆனால் உண்மையில் பார்க்கும்போது, சமூக வலைதளத்தில் யாரை ஃபாலோ செய்ய வேண்டும், யாரை செய்யக்கூடாது என்பது முழுவதும் தனிப்பட்ட விருப்பம் தான். அதை வைத்து உறவுகள் குறித்து முடிவு எடுப்பது சரியா என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கிடையில், சமீப காலமாக விஜய் - திரிஷா குறித்து அதிகமாக வரும் விமர்சனங்கள், கிசுகிசுக்கள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே திரிஷா இப்படிப் பிரிந்து நிற்கும் ஒரு ஸ்டைலை தேர்வு செய்திருக்கிறாரா என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

மொத்தத்தில் பார்த்தால், ஒரு சாதாரண 'ஃபாலோ' விஷயம் கூட இவ்வளவு பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஆனால் இதற்கு உண்மையான பதில் திரிஷாவிடமிருந்து வந்தால்தான் இந்த கேள்விகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைக்க முடியும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+