வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு
சென்னை: சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் "பன்ச்" என்ற குரங்கை பற்றிய கதை பெரிதாக வைரலானது. அந்த குரங்கின் வாழ்க்கை சம்பவங்களும், அதற்கு பிறகு நடந்த மாற்றமும் பலரையும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது. இந்த கதையை தற்போது நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

புறக்கணிக்கப்பட்ட பன்ச்
சமீபத்தில் வைரலான "பன்ச்" என்ற குரங்கு தனது கூட்டத்தில் இருந்த மற்ற குரங்குகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது. அதிலும் அதிர்ச்சியாக, அந்த குரங்கின் அம்மாவே அதை புறக்கணித்ததாகவும் தகவல்கள் பரவின.
இதனால் அந்த குரங்கு தனியாகவே சுற்றித்திரிந்தது. அதைப் பார்த்த கவனிப்பாளர்கள், அதற்கு ஆறுதலாக ஒரு பொம்மையை கொடுத்துள்ளனர். அந்த பொம்மையை பன்ச் எங்கே சென்றாலும் கையில் தூக்கிக்கொண்டு திரிந்தது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதும்,"பாவம் இந்த குரங்கு", "இதுக்கும் உணர்ச்சி இருக்கே" என்று பலரும் கமெண்ட் செய்து பரிதாபம் தெரிவித்தனர்.
கேர்ள் பிரண்ட் கிடைத்த பன்ச்
இந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், சில நாட்களுக்கு பிறகு அந்த குரங்கின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதாக புதிய வீடியோக்கள் வெளியாகின.
அதில், பன்ச் மற்றொரு பெண் குரங்குடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தது, அதற்காக மற்றொரு குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றியது போன்ற காட்சிகள் வெளியானது. இதை "பன்ச் தனது கேர்ள் பிரண்டை காப்பாற்றியது" என்று பலரும் ஷேர் செய்து கொண்டனர்.
இதைத்தான் தற்போது திரிஷா கிருஷ்ணன் தனது ஸ்டோரியில் பகிர்ந்து, "Now that's a gentleman 💪❤️" என்று கமெண்ட் செய்துள்ளார்.
திரிஷா பதிவு
பொதுவாக விலங்குகள் மீது பாசம் கொண்ட திரிஷா இப்படிப் பகிர்வது சாதாரணம் என்றாலும், இந்த முறை அவரது பதிவை ரசிகர்கள் வேறு கோணத்தில் பார்க்க தொடங்கியுள்ளனர்.
சிலர், "இது சாதாரண வீடியோ இல்லை... யாருக்கோ indirect message" என்று கூற, மற்றவர்கள், "அவருக்கு விலங்குகள் மீது இருக்கும் பாசம் தான் இது" என்றும் கூறி வருகின்றனர்.
விஜய் திரிஷா மீண்டும் சர்ச்சை
இந்த பதிவு வெளிவந்துள்ள நேரமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் திரிஷா கிருஷ்ணன் குறித்து சமீப காலமாக பல வதந்திகளும் சர்ச்சைகளும் பரவி வருகின்றன. குறிப்பாக, இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டது. ஒரே நிற உடையில் இருவரும் தோன்றியது கூட ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது.
இதற்கு முன்பாகவே, விஜய்யின் மனைவி கொடுத்த விவாகரத்து வழக்கில், "விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக பழகுவது குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறப்பட்டதாகவும், "அந்த நடிகையின் பெயரை சொல்லவும் தயாராக உள்ளோம்" என்றும் தகவல்கள் இருந்தன.
அதற்குப் பிறகு விஜய் - திரிஷா ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, இந்த வதந்திகளை இன்னும் அதிகப்படுத்தியது.
மீண்டும் திரிஷா பதிவு
இந்த மாதிரி சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, "ஜென்டில்மேன்" என்று ஒரு குரங்கு வீடியோவை பகிர்ந்திருக்கும் திரிஷா கிருஷ்ணன் பதிவு, "இது யாரை குறிப்பது?" என்று மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ரசிகர்கள் கமெண்ட்ஸ்
சமூக வலைதளங்களில் தற்போது இரண்டு வகையான கருத்துக்கள் அதிகமாக வருகிறது. ஒரு பக்கம்,"இது ஒரு சின்ன வீடியோ தான், அதுக்கு ஓவரா அர்த்தம் கற்பனை பண்ண வேண்டாம்" என்று சொல்லி வருகின்றனர். மற்றொரு பக்கம், "சர்ச்சை நேரத்தில் இப்படிப் போஸ்ட் பண்ணுவது சாதாரணமில்லை" என்றும் சிலர் சொல்லி வருகின்றனர்.
-
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்!












Click it and Unblock the Notifications