Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trisha: வதந்திகளுக்கு பதிலடி! திரிஷா வெளியிட்ட போஸ்ட்.. ஆனால் அதில் சொன்ன விஷயத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா கிருஷ்ணன், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரபல திருமண விழாவில் நடிகர் விஜய் உடன் கலந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து வந்த போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியதால், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் கிளம்பின. இந்த நிலையில் திரிஷா அதே உடையுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அதற்கு ஒரு ஷார்ட்டான கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Trisha Krishnan Vijay

திருமண நிகழ்ச்சியில் கவனம் பெற்ற விஜய் - திரிஷா

சென்னையில் நடைபெற்ற அந்த பிரமாண்ட திருமண விழாவில் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் அந்த விழாவில் அதிக கவனம் பெற்றது விஜய் மற்றும் திரிஷா. இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒன்றாக பேசிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் இந்த சந்திப்பு குறித்து பல்வேறு பேச்சுகள் கிளம்பின.

திரிஷா அந்த நிகழ்ச்சிக்கு அழகான தங்க நிற புடவையில் வந்திருந்தார். அந்த எளிமையான ஆனால் மிகவும் க்யூட்டான லுக்கில் அவர் எடுத்த புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக அந்த புடவை மற்றும் ஆபரணங்களுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் பலரும் பாராட்டும் வகையில் இருந்தன. ஆனாலும் விஜய்யும் திரிஷாவும் ஒரே போல மேட்சிங் உடையுடன் வந்தது சோசியல் மீடியாவில் தீயாக பற்றி விமர்சிக்கப்படுகிறது.

திரிஷாவின் முதல் பதிவு

இந்த நிலையில், அந்த திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை திரிஷா தனது சமூக வலைத்தளத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் நேற்று அந்த விழாவில் அணிந்திருந்த அதே புடவையுடன் இருப்பதை ரசிகர்கள் கவனித்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்த திரிஷா, தனது பதிவில் "Thank you for always being my go-to people ❤️"என்று எழுதியுள்ளார். தமிழில் பொருள் பார்த்தால், "எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்து உதவி செய்து வரும் என் அன்பான மக்களுக்கு நன்றி" என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பதில் கொடுப்பார் என்று பார்த்தால் இப்படி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் என்று சிலர் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர்.

விஜய் திரிஷா விவகாரம்.. உங்க ரசிகைனு சொல்லவே வெட்கமா இருக்கு! வெளுத்து வாங்கிய நடிகை காஜல் பசுபதி
விஜய் திரிஷா விவகாரம்.. உங்க ரசிகைனு சொல்லவே வெட்கமா இருக்கு! வெளுத்து வாங்கிய நடிகை காஜல் பசுபதி

புடவை - நகை குறித்து குறிப்பும்

அந்த பதிவில் அவர் அணிந்திருந்த புடவை போதீஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும், அவர் அணிந்திருந்த நகைகள் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினவை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த லுக்கிற்கு ஸ்டைலிங் செய்தவர் ஹர்ஷேனே ரவிச்சந்தர், ஹேர் ஸ்டைலிங் செய்தவர் ரேச்சல் ஸ்டைல் ஸ்மித் என்பதையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வீட்டிற்குள் நடந்த தகராறு.. மகனுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு! சங்கீதாவின் பேட்டி வரும்! பிரபலம் ஓபன்
விஜய் வீட்டிற்குள் நடந்த தகராறு.. மகனுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு! சங்கீதாவின் பேட்டி வரும்! பிரபலம் ஓபன்

ரசிகர்கள் கவனம்

இந்த பதிவு வெளியானதும் ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் விஜயுடன் கலந்து கொண்ட அதே லுக்கில் அவர் புகைப்படங்களை வெளியிட்டிருப்பதால், அந்த பதிவு மேலும் கவனம் பெற்றுள்ளது.

சில ரசிகர்கள் "நேற்று பார்த்த அதே அழகான லுக்" என்று பாராட்ட, இன்னும் சிலர் "இந்த புடவையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் விஜயுடன் சேர்ந்து திரிஷா வந்தது குறித்து சமூக வலைத்தளங்களில் இன்னும் பேசப்பட்டுக் கொண்டிருப்பதால், இந்த பதிவு அதற்கும் தொடர்புடையதாக ரசிகர்கள் பலரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+