பார்த்திபன் சொன்ன வார்த்தை.. ஆனால் திரிஷா கொடுத்த ரிவெஞ்ச்! இது லிஸ்டிலேயே இல்லாதது
சென்னை: சமீபத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையே ஏற்பட்ட சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அந்த விவகாரம் இன்னும் முழுவதும் அடங்காத நிலையில், தற்போது பார்த்திபனின் மகள் கீர்த்தனா (Keerthana Parthiban) உடன் திரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்த்திபன் - திரிஷா சர்ச்சை
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, நடிகை திரிஷா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு பார்த்திபனும் விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டார். இதனால் அந்த விவகாரம் சில நாட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய பேச்சாக இருந்தது.
மும்பையில் நடந்த சந்திப்பு
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் Eka Lakhani வீட்டு திருமண நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் இயக்குநர் மணிரத்தினம், நடிகர் சித்தார்த்த உள்ளிட்ட பலரும் இருந்தனர். அதே நிகழ்ச்சியில் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவும் கலந்து கொண்டிருந்தார்.
சிரித்தபடி எடுத்த புகைப்படம்
அங்கு திரிஷாவும் கீர்த்தனா பார்த்திபனும் சந்தித்து சிரித்தபடி ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் "இன்றைய தலைமுறையினருடன் நான்" என்று குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் வெளியானவுடன் அது வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது.
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு போல
பார்த்திபன் மற்றும் திரிஷா இடையே சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், அவரது மகளுடன் திரிஷா மிகவும் இயல்பாக பழகியதை பார்த்த ரசிகர்கள் பலரும் "பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு போல" என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையை வைத்து மகளிடம் எந்தவிதமான பாகுபாடும் காட்டாமல் பழகிய திரிஷாவின் மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கீர்த்தனா பார்த்திபன் யார்?
கீர்த்தனா பார்த்திபன் சிறுவயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து பிஸியாக இருக்கும் திரிஷா
இதற்கிடையில் திரிஷா தொடர்ந்து பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்ற படம் பொன்னியின் செல்வன். அந்த படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களிடையே அதிகமாக பாராட்டப்பட்டது.
அடுத்ததாக கருப்பு
தற்போது நடிகர் சூர்யாக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள கருப்பு படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கி வருகிறார். மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பார்த்திபனுடன் ஏற்பட்ட சர்ச்சைக்கு நடுவில், அவரது மகள் கீர்த்தனாவுடன் திரிஷா எடுத்துக் கொண்ட இந்த நட்பு புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. "அப்பாவுடன் சண்டை... மகளுடன் நட்பு" என்றே ரசிகர்கள் இதை நகைச்சுவையாக கூறி வருகின்றனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications