திரிஷா நடித்த பிருந்தா வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம்
சென்னை: தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்த "எவர்கிரீன் தலைவி" திரிஷா, "பிருந்தா" என்ற வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் உலகில் கால் பதித்துள்ளார். தெலுங்கு, தமிழ் என பலமொழி ஓடிடி சீரிசாக, sony liv ott தளத்தில் காணக்கிடைக்கிறது. சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கிய, இந்தத் தொடர் எப்படி இருக்கிறது. வாங்க பிருந்தா விமர்சனம் (Brinda web series Tamil review) பார்க்கலாம்.
காட்டில் விறகு கூட எரிய மறுக்கிறது. கண்கள் வெளிர் நிறமாக ஒருவர் பலியாகிறார். தேவி உக்கிரமாக இருப்பதால்தான் இது நடக்கிறது என்கிறார் பூசாரி. உக்கிரமான தேவியை சமாதானப்படுத்த ஒரு சிறுமியை பலியிட முடிவு செய்யும் சில்லிட வைக்கும் காட்சியுடன் ஆரம்ப அத்தியாயம் தொடங்குகிறது. இந்த காட்சி மொத்த சீரிசுக்கான தொனியை செட் செய்கிறது. அப்படியே கட் செய்தால், தேர்வு எழுதி மெரிட்டில் தேர்வாகி நியமிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டராக வருகிறார் திரிஷா. இவரது அமைதியான குணத்திற்காகவும், திறமையாலும், சக ஊழியர்களின் அவமதிப்பையும் எதிர்கொள்கிறார்.

சாக்கடை தண்ணீரில் மிதந்து வந்த ஒரு சடலம், மற்ற போலீசாரின் தலையை பிய்க்க வைக்க திரிஷா அதன் பின்னணியை சரியாக கணிக்கிறார். அதை சீனியர்கள் புறக்கணித்தாலும் தனியாக ஜீப்பை எடுத்து கிளம்பி கண்டுபிடிக்க முயல்கிறார். சப் இன்ஸ்பெக்டராக இருந்தாலும் திரிஷா அந்த நள்ளிரவு நேரத்தில் அப்படி ஒரு இடத்திற்கு போவதை பார்க்கும்போது நமக்கே பதறுகிறது. ஆனால், அங்குதான் திரிஷாவின் வீரத்தை பிரேம் வழியாக கடத்திவிடுகிறார் இயக்குநர். வித்தியாசமான பறவையின் சிறகை வைத்து பிருந்தா, இந்த கொலையின், பின்புலத்தை ஆய்வதில் தொடங்கி, இதன்பிறகு நடப்பதை நீங்கள் திரையில் பாருங்கள்.
இந்த சீரிஸ் ஒரு சாதாரண குற்ற பின்புலத்தை தாண்டி, ஆழமான சமூகப் பிரச்சினைகளை காட்ட முற்படுகிறது. பிருந்தா மற்றும் அவரது நண்பர், சாரதி இருவரும் சேர்ந்து, மிகவும் கொடூரமான குற்றங்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை திகில் அனுபவத்தோடு முன்வைத்துள்ளது பிருந்தா சீரிஸ்.
சில ப்ளாட் பாயிண்ட்டுகள் யூகிக்கக்கூடியதாகத் தோன்றினாலும், வலுவான எழுத்து மற்றும் த்ரிஷாவின் சிறப்பான நடிப்பு ஆகியவை தொடரை தொய்வடைய விடவில்லை. த்ரிஷா, பிருந்தா கதாப்பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் பாபு இருளான காட்சிகளையும் சிறப்பாக படம்பிடித்துள்ளார், எனவே இரவு நேர காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இசையமைப்பாளர் சக்தி காந்த் கார்த்திக் பொருத்தமாக ஸ்கோர் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லாவும் ஒரு பரபரப்பு சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்களிக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, "பிருந்தா" அதன் அழுத்தமான கதைசொல்லல் மற்றும் சிறந்த உருவாக்கத்தால் தெலுங்கு வெப் சீரிஸ் இடத்தில் தனித்து நிற்கிறது. கண்டிப்பாக பிருந்தாவை பார்க்கலாம்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications