சிலர் கற்பனை கதை கட்டுறாங்க! உண்மை கிடையாது! சங்கீதா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. திரிஷா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக நடிகை திரிஷாவின் பெயர் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் தொடர்பான அரசியல் சர்ச்சை, அதை தொடர்ந்து கிளம்பிய பல்வேறு விவாதங்கள், சோசியல் மீடியாக்களில் பரவிய வதந்திகள் என தொடர்ந்து திரிஷாவின் பெயரும் ட்ரெண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் சில வருஷங்களுக்கு முன்பு ராங்கி திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் திரிஷா பேசிய பழைய வீடியோ மீண்டும் வைரல் ஆகி வருகின்றது.

நடிகை திரிஷா பேட்டி

அந்த பேட்டியில் திரிஷா பேச ஆரம்பித்ததும் சோசியல் மீடியாவில் தினமும் நடக்கும் விஷயங்களை பற்றி தனது மனதில் இருப்பதை சொல்லி இருந்தார். சோசியல் மீடியாவில், என்னை பற்றி தினமும் ஏதாவது எழுதிக்கிட்டே இருப்பாங்க. அதை பார்க்கும் போது இவர்களுக்கெல்லாம் ரொம்ப நேரம் இருக்கு போல என்று நினைத்துக் கொள்வேன். ஒரு நடிகருடன் இன்னொரு நடிகரை ஒப்பிடுவாங்க, சிலரை அவமானப்படுத்துவாங்க, என்னை பற்றியும் கற்பனையாக நிறைய விஷயங்கள் எழுதுவாங்க. அதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதுக்கு எல்லாம் நான் ரியாக் பண்ண மாட்டேன்.

Trisha vijay Sangeetha

யாராவது என்னைப் பற்றி உட்கார்ந்து கதை கட்றாங்கன்னு அவங்களுக்கு நேரம் போகவில்லை போல என்று நினைப்பேன். அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டால் போதும். முகம் கூட தெரியாத ஒருத்தர் இன்னொருத்தரை பற்றி கற்பனை பண்ணி கதைகள் எழுதுவது பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வரும். என்னைப்பற்றிய வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பிச்ச அதுக்கு முடிவே இருக்காது. அதனால அதை அப்படியே கடந்து போகின்றது தான் என்னோட மன நிம்மதிக்கு நல்லது.

திரிஷாவுக்கு பிடித்த சாப்பாடு

எல்லா விஷயத்துக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதோடு தன்னைப் பற்றி பரவி வரும் இன்னொரு வதந்தியும் திரிஷா அந்த பேட்டியில் சிரித்தபடியே மறுத்து இருந்தார். அதாவது எனக்கு சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். நல்ல சாப்பாடு என்றால் விட மாட்டேன். வீட்டில் அம்மா சமைக்கிற சைவ சாப்பாடு ரொம்ப பிடிக்கும். வெளியே சாப்பிடணும்னா சென்னையில் நிறைய ஹோட்டல்ல இருக்கு அதுல இருந்து ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். மத்தபடி சங்கீதா சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Trisha vijay Sangeetha

இப்பல்லாம் ஆன்லைனில் புதியது புதியதாக பல ஹோட்டல்கள் பெயர் வருகிறது. அதிலிருந்தும் நான் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிடுவேன். எனக்கு இந்த கடையில் தான் பிடிக்கும் என்று இல்லை. நன்றாக சாப்பாடு இருந்தால் அங்கே திருப்பி சாப்பிடுவேன். இல்லை என்றால் அடுத்த ஹோட்டல் ட்ரை பண்ணி பார்ப்பேன் அவ்வளவுதான் என்று சொல்லி இருக்கிறார்.

வதந்திக்கு மறுப்பு

அதோடு ஒரு மீம்ஸ் பார்த்தேன் அதில் திரிஷா காலையில் ஒரு நாட்டில் சாப்பிட்டால் மாலைக்கு இன்னொரு நாட்டிற்கு சாப்பிட போவாங்க என்று போட்டு இருந்தது. அதெல்லாம் உண்மையே கிடையாது. நான் சாப்பாட்டிற்காக நாடு விட்டு நாடெல்லாம் போக மாட்டேன். அந்த அளவிற்கு பணத்தை செலவழிக்க மாட்டேன். பக்கத்தில் எங்கேயாவது போனா அங்க என்ன சாப்பாடு நல்லா இருக்குமோ அதை சாப்பிடுவேன் அவ்வளவுதான் என்றும் சொல்லியிருக்கிறார்.

ரசிகர்கள் கருத்து

இந்த வீடியோவில் சங்கீதா சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதும் இதை மட்டும் சிலர் கட் பண்ணி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ஏற்கனவே விஜய் திரிஷா இருவரும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. பல சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் திரிஷாவுக்கு அவருடைய நண்பர் விஜய்யின் மனைவி சங்கீதா சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அந்த பேட்டியில் விஜய் மனைவி சங்கீதா சாப்பாடு பிடிக்குமா? அல்லது சங்கீதா ஹோட்டல் சாப்பாடா? என்று திரிஷா சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+