திரிஷாவை இந்த நேரத்தில் பாராட்டியே ஆகணும் ஏனென்றால்..!? பார்த்திபன் வெளியிட்ட அடுத்த வில்லங்க வீடியோ
சென்னை: நடிகை திரிஷா மற்றும் நடிகர்-இயக்குனர் பார்த்திபன் இடையே ஏற்பட்ட சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரிய பேச்சாகி வருகிறது. ஒரு சினிமா நிகழ்ச்சியில் பார்த்திபன் பேசிய ஒரு கருத்திலிருந்தே இந்த விவகாரம் தொடங்கியது.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் ரேபிட்-பயர் சுற்றில் திரிஷாவின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டது. அதை பார்த்த பார்த்திபன், "இந்த குந்தவையை கொஞ்ச காலம் வீட்டிலேயே குந்தவைக்க சொல்லுங்கள்" என்று நகைச்சுவையாக கூறினார். அந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ வீடியோ வெளியாகவில்லை. ஆனால் அங்கு இருந்த ஒருவர் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது.

இந்த வீடியோ வெளியானதும் நடிகை திரிஷா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தனது சமூக வலைதள பதிவில், "ஒருவரின் கையில் மைக் இருக்கிறது என்பதற்காக அவர் பேசுவது நகைச்சுவையோ அறிவார்ந்த பேச்சோ ஆகிவிடாது. சிலர் பேசும் வார்த்தைகள் அவர்களுடைய குணத்தையே வெளிப்படுத்தும்" என்று கூறி பார்த்திபனுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார். இந்த பதிவு இணையத்தில் பெரிய விவாதத்தை கிளப்பியது.
இதற்குப் பிறகு சர்ச்சை பெரிதாகி வருவதை உணர்ந்த பார்த்திபன் உடனே ஒரு ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டார். "அங்கு இருந்த ரசிகர்கள் 'குந்தவை' என்று கத்திக் கொண்டிருந்த சூழ்நிலையில் நகைச்சுவையாக அந்த வார்த்தையை சொன்னேன். அது யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அல்ல. ஆனால் சிலருக்கு அது வருத்தமாக இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். பெண்களின் சுதந்திரத்தை நான் எப்போதும் ஆதரிப்பவன்" என்று அவர் கூறினார்.
பார்த்திபன் வெளியிட்ட புது வீடியோ
இந்த விவகாரம் இங்கேயே முடிந்து விடும் என்று நினைத்த நிலையில், தற்போது பார்த்திபன் மீண்டும் ஒரு புதிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், "இந்த நேரத்தில் திரிஷாவை நான் பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் அவர் ஒரு திரைப்பட நடிகையாக மட்டுமல்ல..." என்று தொடங்கி பேசுகிறார். மேலும் "நீங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புவதற்குள் முழு வீடியோ வரும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், திரிஷாவைப் பற்றி பார்த்திபன் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த புதிய வீடியோ முழுவதும் வெளியான பிறகு இந்த சர்ச்சை எந்த திசையில் போகும் என்று பலரும் காத்திருக்கின்றனர்.
கோடிட்ட இடங்களை
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 9, 2026
நீங்கள் நிரப்புவதற்குள் …..
விடியலாக முழு
வீடியோவே வரும்!https://t.co/dBBQDGoQ9V pic.twitter.com/d2Vu8meFH8












Click it and Unblock the Notifications