திரிஷா வாக்களிக்கும் போது நடந்த சம்பவத்தை கவனிச்சிங்களா? இது எல்லாமே பிளான் தானா?
சென்னை: 2026 தேர்தல் பரபரப்பில் அரசியல் தலைவர்களை விட சில நேரங்களில் திரைப்பிரபலங்கள்தான் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில், நடிகை திரிஷா வாக்குச்சாவடிக்கு வந்த சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் பெரிய பேச்சாக மாறியுள்ளது.
சென்னையில் தனது தாய் உமாவுடன் வந்து திரிஷா வாக்களித்தார். வழக்கம்போல அமைதியாக வந்து தனது ஜனநாயக கடமையை முடித்துவிட்டு சென்றார். ஆனால், அங்கே நடந்த ஒரு விஷயம் தான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

தொண்டர்களின் கதறல்
திரிஷா வெளியே வந்த உடனே, அங்கு இருந்த சிலர் "வாழ்க வாழ்கவே... இளம் தலைவர் வாழ்கவே!" என்று கோஷமிட்டனர். அதைக் கேட்ட திரிஷா சிரித்துக்கொண்டே ரியாக்ட் செய்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இதுவே போதாதென, வாக்களித்த பிறகு அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "கில்லி" பட பாடல் எடிட்டுடன் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், "இது சாதாரணமா? இல்ல விஜய்க்கு மறைமுக சப்போர்ட்டா?" என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
திரிஷா பற்றிய சர்ச்சைகள்
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக விஜய் - திரிஷா குறித்து பல கிசுகிசுக்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. விஜயின் குடும்ப வாழ்க்கை பற்றிய வதந்திகள், விவாகரத்து பேச்சுகள், அதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட சம்பவம் - இவை எல்லாம் அந்த பேச்சுகளுக்கு மேலும் தீனி போட்டது.
அதோடு, "திரிஷா அரசியலுக்கு வரப்போகிறார்... அதுவும் விஜயின் கட்சியில்தான்" என்ற செய்திகளும் ஒரு கட்டத்தில் ட்ரெண்டானது. சில வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய ஒரு பேட்டி கூட இதற்காக மீண்டும் வைரலாக்கப்பட்டது. ஆனால், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்று திரிஷா தன்னுடைய ஸ்டைலில் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
திரிஷாவின் போஸ்ட்
இப்படி எல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், வாக்களிக்க வரும்போது எழுந்த கோஷம், கில்லி பாடல் ஸ்டோரி, ரசிகர்களின் ரியாக்ஷன்இந்த மூன்றும் சேர்ந்து இப்போது ஒரு புதிய கேள்வியை எழுப்பியுள்ளது, "திரிஷா அடுத்தடுத்து அரசியலுக்குள் வரப்போகிறாரா?" என்பதுதான்.
இதோடு இன்னொரு விஷயமும் ரசிகர்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், "முதல்வராக வேண்டும்" என்ற ஆசையை திரிஷா சிரித்தபடி கூறியிருந்தார். அந்த கிளிப் இப்போது மீண்டும் சுற்றிக்கொண்டு வருகிறது.

திரிஷா பேசிய பேட்டி
அதனால் தான் சில நெட்டிசன்கள், "அப்போ சொன்னது ஜாலிக்காக இருந்தாலும்... இப்போ அது நிஜமாகப் போகுதா?" என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனா, இன்னொரு பக்கம் உண்மை என்னனா திரிஷா தற்போது சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கருப்பு, விஸ்வம்பரா போன்ற படங்கள் ரிலீஸ்க்கு ரெடி. மேலும் புதிய படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார். அதனால், இப்போதைக்கு இது எல்லாம் ரசிகர்கள் உருவாக்கும் இணைப்புகளா... இல்ல உண்மையிலேயே ஏதாவது மாற்றம் வரப்போகிறதா... என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஆனா ஒரு விஷயம் மட்டும் கிளியர் நேற்று வாக்குச்சாவடியில் எழுந்த அந்த "இளம் தலைவர்" கோஷம்... திரிஷாவை பற்றிய அடுத்த கட்ட விவாதத்துக்கு ஸ்டார்ட் பட்டனை அழுத்தி விட்டது!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications