ஓட்டு போட திரிஷா அணிந்திருந்த டிரஸ் விலை தெரியுமா? நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டீங்க! இவ்வளவு விஷயம் இருக்கா?
சென்னை: 2026 தேர்தல் முடிந்ததும் அரசியல் பேசுவதை விட, "யாரு என்ன ஸ்டைல்ல ஓட்டு போட்டாங்க?"ன்னு தான் மக்கள் அதிகமா பேச ஆரம்பிச்சிருப்பாங்க. அந்த லிஸ்ட்ல இரண்டு விஷயம் தான் இப்போ டாப் ட்ரெண்ட். ஒன்று திரிஷாவின் டிரஸ் விலை, விஜய் ஸ்டைல் டிரஸ் கோட்.

திரிஷா டிரஸ் விலை
நேற்று வாக்குச்சாவடிக்கு வந்த திரிஷாவை பார்த்தவுடன் பலருக்கும் ஒரு விஷயம் தான் தோன்றியது. ரொம்ப எளிமையான லுக்ல வந்திருக்காங்களே என்று பலரும் கமெண்ட்ஸ் கொடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. எந்த ஓவரான ஸ்டைலும் இல்லை, மேக்கப் கூட குறைவு, ஒரு சாதாரண பெண் கூட்டத்தில் கலந்த மாதிரி தோன்றும் அளவுக்கு இயல்பான தோற்றம் இருக்கே என்று சிலர் கமெண்ட்ஸ்களை கொட்டி இருந்தனர்
ஆனால் அவர் அணிந்திருந்த குர்த்தி பற்றிய தகவல் இப்போ வெளியாகியிருக்கிறது. அதாவது "யாம் இந்தியா" என்ற இந்தியன் க்ளோதிங் பிராண்டின் ஷார்ட் குர்தா செட். இந்த பிராண்டின் ஸ்டைல் என்னன்னா - கலர்ஃபுல் டிசைன், பூக்கள் பிரிண்ட், லைட் வெயிட் பேப்ரிக், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற கம்ஃபர்டபிள் அவுட்ஃபிட்ஸ். மொத்தத்தில் சொல்லனும்னா இந்த வெயிலுக்கு ஏற்ற டிரஸ். நச நசனு வெயிட்டாக இல்லாமல் லைட்டாக இருக்குமாம்.
திரிஷா போட்டிருந்த அந்த டிரஸ்ஸும் அதே லைன்ல தான் இருந்தது. செமி கலர்ஸ் பயன்படுத்தி பூக்கள் பூக்கும் தருணத்தை ரொம்ப மென்மையாக டிசைனில் காட்டியிருந்தாங்க. அதிகமாக கண்ணை குத்தும் கலர் இல்லாமல், பார்ப்பதற்கு குளுமையான லுக். அதோடு மேட்சிங் பேண்ட் சேர்ந்து, இந்த கடும் வெயிலில் போடக்கூடிய ஈசி வேர் மாதிரி இருந்தது.
ஆனா இந்த லுக்கை விட பெரிய டிஸ்கஷன் கிளப்பியது அதன் விலை தான். அந்த குர்தா செட்டின் விலை சுமார் 14 ஆயிரம் ரூபாய் என்று தகவல் வெளியானதும், இணையத்தில் உடனே ரியாக்ஷன்கள் குவிந்துவிட்டது. சிலர் "பிராண்டு என்றாலே விலை அதிகம்தான், கம்ஃபர்ட்டுக்காக வாங்குறது தவறில்லை" என்று சொன்னார்கள். இன்னொரு பக்கம் "இதே மாதிரி டிசைன் நம்ம ஊர்ல 300-400 ரூபாய்க்கே கிடைக்கும் போல இருக்கே" என்று கலாய்ப்பும் வந்தது.

விஜய் டிரஸ் கோட்
இதே நேரத்தில் இன்னொரு விஷயம் பெரிய ட்ரெண்ட் ஆகி இருந்தது. அது விஜய் அணியும் டிரஸ் ஸ்டைல். விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவர் அடிக்கடி அணியும் வெள்ளை சட்டை மற்றும் சாண்டல் நிற பேண்ட், இந்த தேர்தல் நாளில் ஒரு மாதிரி அடையாளமாகவே மாறியிருந்தது.
பல சினிமா பிரபலங்கள் அதே கலரில் வந்து வாக்கு செலுத்தினார்கள். அதைவிட சுவாரஸ்யமானது, சாதாரண ரசிகர்களும் தொண்டர்களும் அந்த ஸ்டைலை நேரடியாக follow பண்ண ஆரம்பித்திருந்தார்கள்.
வாக்குச்சாவடிகளுக்கு வெளியே பார்த்தால், ஒரே மாதிரி டிரஸ் போட்ட பலரை பார்க்க முடிந்தது. அது ஒரு கூட்டமாக இல்ல, ஒரு feeling மாதிரி இருந்தது. "நாங்களும் விஜய் வழியில தான் இருக்கோம்"ன்னு சொல்லும் ஒரு சின்ன சைகை போல.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் - பெண்களும் இந்த டிரஸ் கோட்டை follow பண்ணியிருந்தார்கள். வெள்ளை குர்தா, லைட் கலர் பேண்ட், சிலர் முழுக்க அந்த கலர் காம்பினேஷனை match பண்ணி வந்திருந்தார்கள். இது ஒரு fashion choice மட்டும் இல்ல, ஒரு அடையாளமாக மாறியிருப்பது தெளிவாக தெரிந்தது.
இந்த தேர்தல் ஒரு சின்ன விஷயத்தை பெரிய அளவில் காட்டுச்சு. ஒரு பக்கம் திரிஷா - சிம்பிள் லுக்கில் வந்தாலும், பிராண்டு டிரஸ் காரணமாக பேசப்படுகிறது. மற்றொரு பக்கம் விஜய் அணிந்து இருந்தது மிகவும் சாதாரணமான கலர் காம்பினேஷன், ஆனா அது மக்கள் மத்தியில் ஒரு ட்ரெண்ட் ஆக மாறி இருக்கிறது.
-
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications