எனக்கும் சிம்புவுக்கும் மேஜிக் ஒர்க் அவுட் ஆகிவிட்டது! மேடையில் திரிஷா ஓபன்.. கமல் கொடுத்த பதில்
சென்னை: விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு தக் லைஃப் படத்துல சிம்புவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் திரிஷா தங்கள் இருவருக்கும் மீண்டும் மேஜிக் ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்று தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டில் பேசி இருக்கிறார்.
நடிகை திரிஷாவுக்கு இந்த வருடம் லக்கான வருடமாக தான் அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து திரிஷா நடித்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அவர் நடித்த தக் லைஃப் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிகை திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பெரிய கூட்டணி
அதுபோல நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இருவரும் இணைந்து இந்த திரைப்படத்தில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைந்து படத்தில் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இப்போது மகிழ்ச்சி தான். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
சிம்பு பேட்டி
அதுபோல கமல் மற்றும் சிம்பு இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அதில் சிம்பு பேசும்போது, எனக்கு இந்த படத்தில் நடித்தது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது இது எனக்கு ஒரு கனவு மாதிரி தான்.
சிம்பு நெகிழ்ச்சி
மணிரத்தினம் சாரோட படத்துல ஒரு சின்ன பார்ட்டா இருக்கிறது எல்லோருக்குமே ஆசை. அதுவும் ரகுமான் சார் மியூசிக்ல, என் ஸ்கிரீன் குரு கமல்ஹாசன் கூட நடிக்கிறது கனவு மாதிரி இருக்கு. ஆரம்பத்துல கொஞ்ச நாள் நடிக்க ரொம்ப கஷ்டமா இருந்து. இதுக்கு முன்னாடி மணி சார் கூட செக்க சிவந்த வானம் படம் பண்ணிருக்கதால் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு தகுந்த மாதிரி நடிக்க கத்துக்கிட்டேன். ஆனால் இந்த படத்துல ஒரு பக்கம் கமல் சாரும் இன்னொரு பக்கம் மணிரத்தினம் சாரும் இருக்கிறார்கள்.
கனவு நிறைவேறியது
இந்த படத்திற்காக கமல் சார் சிறப்பாக டான்ஸ் ஆடி இருக்கிறார்கள் என்று சிம்பு பாராட்டி பேசுகின்றார். அதைத்தொடர்ந்து பேசிய திரிஷா இது ஒரு லெஜெண்டரி ஸ்டேஜ் இந்த படம் சைன் பண்ணுவதற்கு அப்புறம் என்னுடைய போஸ்ட்லயே நான் போட்டேன் "கனவு எல்லாம் நிஜமாக போகுதுன்னு" அதுக்காக மணி சார், கமல் சார், ரகுமான் சாருக்கு நன்றி.
திரிஷா பேட்டி
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு தக் லைஃப் படத்துல எனக்கும் சிம்புக்கும் மேஜிக் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் அதிகமாக சிம்புவுடன், கமலுடன் தான் காட்சிகள் இருக்கிறது. அபிராமியோட ஒரு பாட்டு நடிச்சிருக்கிறேன். அபிராமியும் நானும் ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். 22 வருஷத்துக்கு முன்னாடியே நாங்க மீட் பண்ணி இருக்கிறோம்.
திரிஷா விளக்கம்
அதுபோல சிம்புவுடன் நீங்க எப்போது நடிப்பீங்க என்று பலர் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. அந்த தருணம் இப்போதுதான் வந்திருக்கிறது என்று பேசி இருக்கிறார். அடுத்ததாக பேசிய கமல்ஹாசன் சிம்புவும் திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் ஜெசியை ஞாபகப்படுத்துகிறார்கள். அந்த படம் காதலில் தேசிய சின்னம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பலருடைய ஃபேவரைட்டாக இருந்து வருகிறது.
கமல் பேச்சு
இந்த திரைப்படத்தில் இரண்டு நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளும் எனக்கு ஐ லவ் யூ என்று கூறியது கிடையாது. ஆனால் இந்த படத்தில் நடித்த ஜார்ஜ் எங்கு பார்த்தாலும் குட் மார்னிங் கூட சொல்ல மாட்டார் ஐ லவ் யூ சார் என்று தான் சொல்வார். எனக்கு நடிகைகள் இருவரும் ஐ லவ் யூ சொல்லவில்லை என்றால் என்ன போனால் போகுது நமக்கு ஒரு ஆள் ஜார்ஜ் இருக்கிறாரே என்று மனதை தேற்றிக் கொள்வேன் என்று கலகலப்பாக பேசி இருக்கிறார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications