திரிஷா காரில் இருந்த சிலுவை.. மதத்தை வைத்து எழுந்த சர்ச்சை! சரியான பதிலடி!
சென்னை: நடிகை திரிஷா வாக்களிப்பதற்காக அவருடைய காரில் வந்த போதே அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அப்போது காருக்குள் இருந்த சிலுவையை பார்த்த சில நெட்டிசன்கள் அதை வைத்து திரிஷாவை கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு ரசிகர்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கு திரிஷாவும் அவருடைய அம்மா உமாவும் வந்து வாக்கு செலுத்தி விட்டு தன்னுடைய காரில் போகும்போது திரிஷா அங்கிருந்த ரசிகர்களை நோக்கி கை காட்டி இருந்தார். பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கும் பதில் கொடுத்து இருந்தார். அந்த சமயத்தில் திரிஷா பக்கத்தில் சிலுவை கொண்ட ரோசரி மாலை தொங்கிக்கொண்டு இருந்திருக்கிறது.

நெட்டிசனின் போஸ்ட்
இதை சோசியல் மீடியாவில் பலரும் கவனித்திருக்கின்றனர். ஆனால் சிலர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒருவர், திரிஷா ஒரு பிராமண பொண்ணு அவர் பெயருக்கு பின்னாடி இருக்கும் கிருஷ்ணன் என்ற பெயர் கூட கிருஷ்ண பக்தர் என்று அர்த்தம் ஆனால் திரிஷாவின் காரில் சிலுவை இருக்கிறது... என்று ஒரு போஸ்ட் போட்டு வைத்திருக்கிறார். திரிஷா சிலுவை வைத்திருந்தது ஏதோ ஒரு பெரிய தவறு என்பது போல அந்த நபர் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் அந்த நெட்டிசனின் பதிவுக்கு அவரை திட்டி வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் திரிஷாவிற்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர் இந்த கடவுளை தான் கும்பிட வேண்டும், அந்த கடவுளைத்தான் கும்பிட வேண்டும் என்று யாரும் யாருக்கு அறிவுரை சொல்ல முடியாது, அவருடைய பெயருக்கு பின்னாடி இருக்கும் கிருஷ்ணன் என்பது கூட அவருடைய அப்பாவின் பெயர் அதை திரிஷா வைத்திருக்கிறார் அவருக்கு எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்று தோன்றுகிறதோ அதையே அவர் பின்பற்றுவது அவருடைய உரிமை அதை அசிங்கப்படுத்தியோ அல்லது அதை ஏளனப்படுத்தியோ பேசுவதும் நமக்கு வேலை கிடையாது என்று சிலர் கொடுத்திருக்கின்றனர்.

திரிஷாவுக்கு சப்போர்ட்
இன்னும் ஒரு சிலர் திரிஷா சமீபத்தில் தான் ஏழுமலையான் கோவிலுக்கு போயிட்டு வந்திருந்தார். அதோடு அடிக்கடி கோவில் தரிசனம் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அப்படி இருக்கும்போது அவருக்கு எது பிடிக்கிறதோ அதை அவர் செய்கிறார் அதனால் உங்களுக்கு என்ன கஷ்டம் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
மேலும் இன்னும் ஒரு சிலர், திரிஷா கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர். அதனால் அவர் சிலுவை வைத்திருக்கலாம். நாட்டுல மனுஷங்க என்னவெல்லாம் கண்டு பிடிச்சுகிட்டு இருக்கிறாங்க ஆனால் இவங்க என்னன்னா காரில் இருக்கும் சிலுவையை கண்டுபிடிச்சிட்டு அதை வைத்து ஒரு விமர்சனம் பண்ணிக்கிட்டு இருக்காங்களேன்னு சிலர் அந்த நபரை கலாய்த்து திட்டி வருகிறார்கள்.
She is Trisha Krishnan, Tamil and Telugu actress. She was also in Khatta Mittha.
— Chota Don (@choga_don) April 24, 2026
She comes from a traditional Tamil Brahmin Hindu family. The meaning of Krishnan is “devotee of Krishna"
But, Her car has a cross ✝️ pendant pic.twitter.com/LHNWVrHy6j












Click it and Unblock the Notifications