நடிகை திரிஷாவுக்கு வந்த சிக்கல்.. ஒரே ஒரு போஸ்டால் இணையமே அதிருது! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவுதான் இணையம் முழுக்க பேசும் பொருளாக மாறி இருக்கிறது. தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும், தன்னுடைய டெய்லி ரொட்டீனையும் பகிர்ந்து வந்த திரிஷா இந்த முறை எதிர்காலத்தை குறித்து வெளிப்படையாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

திரிஷா பிறந்தநாள் கொண்டாட்டம்
சமீபத்தில் நண்பர்களுடன் முன்கூட்டியே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, அதற்கான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திருந்த திரிஷா, அதே நேரத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்வது போல ஒரு சுவாரஸ்யமான பதிவையும் போட்டார்.
திரிஷா இன்ஸ்டா பதிவு
அந்த பதிவில், "ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால் அதை ஈடுகட்ட 4 நாட்கள் ஆகும். அந்த கணக்குப்படி பார்த்தால், 2062-ல் தான் நான் மீண்டும் ஃப்ரெஷாக உணருவேன்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஒரு வரி தான்... ஆனால் அதுவே ரசிகர்களிடையே பெரிய ரியாக்ஷனை உருவாக்கி விட்டது. சிலர் இதை ஜாலியாக எடுத்துக் கொண்டு "திரிஷா ஹ்யூமர் லெவல் வேற லெவல்" என்று பாராட்ட, இன்னும் சிலர் "அவ்வளவு தூக்கம் கிடைக்கலையா? கவனிக்கணும்" என்று உண்மையாகவே கவலைப்பட்டுள்ளனர்.
திரிஷாவின் பேட்டி
திரிஷா இப்படிச் சொல்வது புதுசல்ல. முன்பே பல பேட்டிகளில் தன்னை ஒரு "நைட் பர்சன்" என்று சொல்லியிருக்கிறார். அதாவது, இரவு நேரங்களில் தான் அதிக சுறுசுறுப்பாக இருப்பார். பகல் நேரத்தில் தூக்கம் குறைவாக இருக்கும். இதை அவர் மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்.
குறிப்பாக 96 படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்தில் நடந்தது. அப்போது கூட "எனக்கு இது கம்ஃபர்ட்டாக தான் இருக்கு" என்று கூறியிருந்தார். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கை ஸ்டைல் நைட் ருட்டீனுக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கிறது.
ஆனால், இப்போது அவர் போட்ட இந்த பதிவு ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, ஒரு விஷயத்தை நினைக்கவும் வைத்துள்ளது. சினிமா வாழ்க்கை வெளியில் நமக்கு குளிர்ச்சியான, க்ளாமரான வாழ்க்கையாகத் தோன்றினாலும், அதற்குள் இருக்கும் அழுத்தம், வேலை நேரம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் எவ்வளவு இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

ரசிகர்கள் கமெண்ட்ஸ்
இந்நிலையில், திரிஷாவின் இந்த ஸ்டோரி கீழே ரசிகர்கள் கமெண்ட்களில், "தலைவி நல்லா தூங்கணும்" "கடவுளே எங்கள் திரிஷாவுக்கு ரெஸ்ட் கொடு" என்று பாசமாகப் பதிவிட்டு வருவது கவனம் ஈர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் சமீப காலமாகவே திரிஷா அதிகம் அல்ல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அதனால் கூட அவருக்கு தூக்கம் வராமல் இருக்கிறதா என்றும் பலரின் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஒரு சாதாரண ஸ்டோரி... ஆனால் அது ரசிகர்களுடன் ஒரு நேரடி கனெக்ஷன் உருவாக்கி விட்டது. அதுதான் திரிஷாவின் ஸ்டைல். அவர் இப்போது பகிர்ந்த பதிவு பெரிய விஷயமில்லை... ஆனாலும் எல்லாரும் பேசும் விஷயமாக மாற்றிவிடுவார்.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications