பிக் பாஸ்க்கு விழுந்த பெரிய அடி.. புதிய சாதனை படைத்த சரிகமப.. திடீர் மாற்றத்துக்கு காரணம் இதுதானா?
சென்னை: ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு அடுத்த வாரத்தில் வியாழக்கிழமை டிஆர்பி லிஸ்ட் வெளியாவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி லிஸ்ட் நேற்று வெளியானது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி அதிக டிஆர்பி பெற்றிருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பிபி சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது இனிமையான குரலின் மூலமாக உலகம் முழுவதும் எக்கச்சக்கமாக ரசிகர்களை சம்பாதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக திவினேஷ் மற்றும் யோகஸ்ரீ போன்ற போட்டியாளர்களுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பெரிய பாஸ் நிகழ்ச்சியை சரிகமப தொடர்ந்து பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் வெளியாகியுள்ள ரேட்டிங்கின் படி சிட்டி, விலேஜ் என தமிழகம், பாண்டிச்சேரி உட்பட அனைத்து இடங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி சரிகமப புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது.
இந்த பெரிய பாஸ் நிகழ்ச்சியில் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெற முடியாமல் நிகழ்ச்சி குழுவினர் திக்குமுக்காடி வருகின்றனர்.சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 8 போட்டியாளர்களில் இருவரை ரீ-பிளேஸ் செய்ய ஏற்கனவே வெளியேற்றப்பட்ட 8 போட்டியாளர்களை உள்ளே அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல பாடல் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ரவுண்டு நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரத்தில் இது சரிகமப நிகழ்ச்சியில் விஜயகாந்த் ரவுண்டு நடைபெற்றது. அதில் பாடப்பட்ட பாடல்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் வருகை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு அதிக டிஆர்பி கிடைத்திருக்கிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications