சின்னத்திரை சாதனைக்காக...முதல் முறையாக ப்ளூ சட்டை மாறனை வாழ்த்தும் அஜித் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இது ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்விட்

ப்ளூ சட்டை மாறன் ட்விட்

விஸ்வாசம் படத்தின் சேட்டிலைட் டி.ஆர்.பி. சாதனை குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவரது ட்விட்டை பார்த்து... "அப்புறம்.. என்ன பா....?? நாட்டாமையே சொல்லிட்டாரு...பஞ்சாயத்தை கலைங்க...!! எப்பவும் எங்க ஏ.கே தான் டாப்பு... என்று அஜித் ரசிகர்கள் மார்தட்டி வந்தாலும்.... "நரி.. ஊளையிட்டிருச்சி இனி உஉஊஊஊ.. என்று ரஜினி, விஜய் ரசிகர்களும் டுவிட்டரில் மல்லுக்கட்டி வருகின்றனர்.

ரிவ்யூ

ரிவ்யூ

எவ்வளவு பெரிய நடிகர் நடித்திருந்த படமாக இருந்தாலும், எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், தப்பித்தவறி கூட நல்ல விதமான ரிவ்யூவ் சொல்ல கூடாது என்ற கங்கணம் கட்டிக்கொண்டு யூடியூப் சேனல் நடத்திவரும் ப்ளூ சட்டை மாறன் அவர்களைப்பற்றி சமூக வலைதளங்களில் தெரியாதவர்களும், அவரை திட்டாதவர்களும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தன் ரிவ்யூ சொல்லும் திறமையால் அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் ப்ளூ சட்டை மாறன் ஆவார்.

 சேட்டிலைட் டி.ஆர்.பி. சாதனை

சேட்டிலைட் டி.ஆர்.பி. சாதனை

அஜித் நடித்த விவேகம் படத்தை விமர்சித்த விதத்தால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களாலும் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானார் மாறன், அதற்கு பரிகாரம் தேடும் பொருட்டு விஸ்வாசம் படம் நிகழ்த்தியுள்ள சேட்டிலைட் டி.ஆர்.பி. சாதனையை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ஒருவகையில் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய் அவர்களின் படங்களை குறைத்து பட்டியலிட்டுள்ளது அவர்களது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விஸ்வாசம் படத்தின் சாதனை

விஸ்வாசம் படத்தின் சாதனை

டி.ஆர்.பி ல் டாப்5 தமிழ் படங்களை வரிசைப்படுத்தி மாறன் அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியல் படி விஸ்வாசம் 18 .14 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்திலும் பிச்சைக்காரன்(17.69M) அண்ணாத்தே17.37 சர்க்கார்(16.9M) சீமராஜா(16.7M) போன்ற படங்கள் அடுத்தடுத்து இடங்களிலும் இடம்பெற்றுள்ளது.விஸ்வாசம் படம் வெளிவந்த சமயத்தில் படத்தில் அப்பா மகளுக்கு இடையே உள்ள பாச காட்சிகள் பெரிதளவு ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்ததால், தியேட்டரில் இருந்த அதே வரவேற்பு டிவியிலும் குடும்பங்கள் மத்தியில் தொடர்வதாகவும், இதைப்போல சென்டிமென்ட் படங்களை மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் என்று சினிமா ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+