பிக் பாஸ் தினேஷ் மீது நடவடிக்கையா? காரணம் இதுதானா? டிவி நடிகர் சங்க பொது குழுவில் முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபலமான தினேஷ் மற்றும் அவரோடு சார்ந்த சில சின்னத்திரை நடிகர்கள் மீது டிவி நடிகர் சங்க பொது குழுவில் நடவடிக்கை எடுக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் தலைவராக சிவனும் போது செயலாளராக போஸ் வெங்கட்டும் இருந்து வரும் நிலையில் இவர்கள் தலைமைக்கு வந்த பிறகு சங்கத்தில் நடக்கும் முதல் பொதுக்குழு நாளை மறுதினம் அதாவது வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. அதில் கடந்த முறை பதவியில் இருந்த பல பேர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

அதாவது நாளை மறுதினம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற இருக்கும் பொது குழுவில் கடந்த முறை சங்க நிர்வாகத்தில் இருந்த சிலர் மீது நிதி மோசடி புகார் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதாவது சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போதைய நிர்வாகத்தினர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு ரவி வர்மா தலைமையிலான நிர்வாகத்தினர் தான் பதவியில் இருந்தார்கள்.

TV Actors Association is going to take action against Dinesh

அப்போது நடிகர் நடிகைகளை மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். அப்போது கிட்டத்தட்ட 11 லட்சம் பணம் மோசடி நடந்ததாக அந்த நேரத்தில் சில பிரச்சனைகள் நடைபெற்றிருக்கிறது. அதை தொடர்ந்து சிவன் தலைமையிலான அணி பொறுப்புக்கு வந்தால் கடந்த காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரின் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தல் நேரத்தில் கூறியிருக்கிறார்கள்.

அதுபோல கடந்த தேர்தலில் சிவன், போஸ் வெங்கட் அணி வெற்றி பெற்று பதவிக்கும் வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த அணி பதவிக்கு வந்து பிறகு முதல் முறையாக வரும் ஜனவரி 26 ஆம் தேதி பொது குழு விருகம்பாக்கத்தில் நடக்க இருக்கிறது. இதில் இப்போதைய நிர்வாகத்தினர்கள் சொன்ன மாதிரி முந்தைய நிர்வாகத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை வரும் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த நிர்வாகத்தில் தலைவர் ஆக இருந்த ரவிவர்மா தொடர்ச்சியாக சின்னத்திரை சங்க தேர்தலில் இரண்டு மூன்று முறை தோல்வி அடைந்து தான் கடந்த முறை வெற்றி பெற்று இருந்தாராம். அதுபோல இந்த தேர்தலில் கூட ரவிவர்மா தோற்பதற்கு காரணமும் மலேசிய கலை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சை தான் என்று கூறப்படுகிறது. சில நடிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் தினேஷ் ரவிவர்மா அணியில் கடந்த முறை இருந்திருக்கிறார். அதுபோல இப்போதும் இப்போதைய நிர்வாகத்திலும் பதவியில் இருக்கிறார். ஆனால் கடந்த முறை ரவிவர்மாவிற்கு சங்க நடவடிக்கை தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்கியதாகவும், அது தொடர்பாக நிர்வாக பதவியில் இல்லாமலே சில சங்க ஆவணங்கள் சிலவற்றை கையாண்டதாகவும் தினேஷ் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதாம்.

அதுபோல தினேஷ் மட்டுமல்லாமல் ராஜ்காந்த் உட்பட சில நடிகர்கள் ரவிவர்மா அணியில் இருந்து இப்போது பதவியில் இருக்கும் அணியிலும் இடம் பிடித்திருக்கின்றனர். இதனால் இவர்கள் பொதுக்குழுவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் கூட்டம் நடத்துவதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது..

இது பற்றிய ரவிவர்மா தரப்பினர் இப்போதைய நிர்வாகத்தினர்கள் பதவிக்கு வந்த பிறகு எந்த ஒரு விஷயமும் உருப்படியாக செய்யல. அதைப்பற்றி உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காகத்தான் அதை திசை திருப்புவதற்காக இந்த மாதிரி தேவையில்லாத வேலைகளை செய்கிறார்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆனால் எது எப்படியோ வரும் வெள்ளி அன்று நடைபெற இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க பொது குழுவில் பெரிய பிரச்சனைகள் வெடிக்கப் போகிறது என்று தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்பது பலருடைய பதிலாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+