டிவி நடிகை பிரியங்கா திடீர் தற்கொலை
Recommended Video

சென்னை: டிவி நடிகை பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார்.
பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. குறிப்பாக இவர் நடித்த வம்சம் டிவி சீரியலில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தவர்.

வளசரவாக்கத்தில் வசித்து வந்த பிரியங்காவுக்குத் திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் பிரியங்கா. அவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது.
குடும்பத் தகராறு காரணமாக பிரியங்கா தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை. பிரியங்காவுக்கும் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண்பாலாவுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. மேலும் கருத்து வேறுபாடு காரணமாக 2 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தப் பின்னணியில்தான் பிரியங்கா மரணமடைந்துள்ளார்.
இன்று காலை வீட்டு வேலைக்கார பெண் வந்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சடலத்தை கைப்பற்றி வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு நடிகர்கள், நடிகைகள், குறிப்பாக டிவி தொடர்களில் நடித்து வந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
முன்பு ஷோபனா, சாய் பிரஷாந்த் என பல கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. தொடர்ந்து அதிகரித்து வரும் தற்கொலைகளால் திரையுலகமும், சின்னத்திரை உலகமும் கவலை அடைந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications