முகமா இல்லை புன்னகைக் குளமா?.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா!
சென்னை: ஷீலா தம்பிச்சோழன்... ரொம்ப ஹேப்பியா இருக்கார்.. மத்தாப்பூ போல அலர்ந்து மலர்ந்திருக்கிறது அவரது அழகு முகம். முகமா இல்லை புன்னகைக் குளமா என்று சந்தேகிக்கும் அளவுக்கு அத்தனை மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.. காரணம், அவர் நடித்த டூலெட் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளதால்.
சொல்லுங்க ஷீலா.. எப்படி இருக்கீங்க என்று கேட்டோம்.. 'டு லெட்' பார்த்தாச்சு, ரொம்ப ஹேப்பியா இருக்கு. இன்டர்நெஷனல் ஆடியன்ஸ் கூட நான் இந்த படத்தைப் பார்த்தப்போ, அவங்க என்ன ஃபீல் பண்ணி கமெண்ட் குடுத்தாங்களோ, அதே கமெண்ட்ஸ்தான் நேத்து நம்ம ஊர் மக்கள் கூட படம் பார்த்தப்பவும் குடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.
நம்ம மக்களோட ரசனை என்பது உலகத்த தரம் வாய்ந்த ரசனை என்பதை இன்னிக்கு நேரில் பார்த்து உணர்ந்தேன்.ரொம்ப ஹேப்பி தியேட்டர்ல இந்த படம் ரிலீஸாகும்னு நினைச்சு பார்க்கலை. டைரக்டர் செழியன் சார், இது முழுக்க முழுக்க ஃபெஸ்டிவெல் மூவின்னு சொல்லித்தான் எடுத்தார்.

30 விருதுகள்
ஆனா, பல்வேறு திரைப்பட விழாவுல கலந்துக்கிட்டு, 30 விருதுகள் வாங்கின பின்னால் தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். நிறைய பேர் எனக்கு வாழ்த்து தெரிவிச்சுக்கிட்டு இருக்காங்க.படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சு இருக்கு. இப்போ எனக்கு நம்பிக்கை வந்திருக்கு. என் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் நடந்து இருக்கறதா ஃபீல் பண்றேன்.சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியலை, ரொம்ப ஹேப்பியா இருக்கேன் என்று கூறி நிறுத்தினார் ஷீலா.

சீரியல் பூங்கொடி
டு லெட் படம் முடிந்த கையோடு, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்து வருகிறார் ஷீலா. அதில் இவருக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்து இருக்கிறது. சீரியலில் இவரது பெயர் பூங்கொடி. இவரது பெயரான ஷீலா என்பதைவிட பூங்கொடி என்ற பெயரில் இவரை அழைத்தவர்கள்தான் அதிகம். சென்னைக்கு மிக அருகில் என்று சொல்லப்படும் சென்னைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு கல்லூரியில் ஷூட்டிங் நடக்கும்போது, அங்கு வயற்காட்டு வேலையை முடித்து வந்த பெண்கள் இவரிடம் 'பூங்கொடி மணி என்னாச்சு" என்று கேட்க, இவர் 5 மணி என்றார்.
இரண்டு விருதுகள்
அந்தளவுக்கு கதாபாத்திரத்தோடு ஒன்றிய ஷீலா தம்பிச்சோழனுக்கு டு லெட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஷீலா பரத நாட்டிய கலைஞர் என்பது இவ்வேளையில் குறிப்பிட்டதுதக்கது.

தமிழ் மகளுக்கு விருது கிடைக்காதா என்ன
எனக்கு விருது கிடைக்கலேன்னாலும் பரவாயில்லை, டைரக்டர், படக்குழுவுக்கு விருது கிடைக்கணும் என்று அப்போது சொல்லியிருந்தார் ஷீலா. ஆனால் இப்போது இவரது கையில் மட்டும் இரண்டு விருதுகள். அழகிய தமிழ் மகளுக்கு விருது கிடைக்காமல் போகுமா என்ன?! தொடர்நது அசத்துங்க ஷீலா.. நடிப்பிலும், விருது பெறுவதிலும்.. மனமார்ந்த வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications