For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்பெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறதில்லை.. ரூம் ரூமா போய் ஒட்டுக் கேட்பாங்க போல!

Google Oneindia Tamil News

சென்னை: டிவிக்காரங்க ...அதாவது ஸ்லாட் வாங்கறவங்க இப்போ எல்லாம் ரூம் போட்டு யோசிக்கறதில்லைன்னு நாம அடிக்கடி அங்கலாய்க்கறது உண்மைதாங்க.

அப்படித்தான் தினம் நாம் பார்க்கும் சீரியல்கள் இருக்குது. இந்த சீனை பார்த்தா அந்த படத்துல பார்த்த மாதிரியும், அந்த சீனைப் பார்த்தா டிரெயிலர்ல பார்த்த மாதிரியும் இருக்கு.

அதாவது படத்தை எடுத்து அவங்க ரிலீஸ் செய்றதுக்கு முன்னமேயே, டிரெயிலர பார்த்து ஒரு சீன் வச்சுடறாங்க. இதுக்கெல்லாம்... ஒரு குட்டு செல்லமா வைக்கணும்...

இருட்டு அறையில்... இரும்பு சங்கிலி... எப்போதும் கூச்சல்... ஜானு அங்க எதுக்கு போனா? இருட்டு அறையில்... இரும்பு சங்கிலி... எப்போதும் கூச்சல்... ஜானு அங்க எதுக்கு போனா?

முரட்டு பேபி

முரட்டு பேபி

ரவுடி பேபி பாட்டுத்தான் வந்துச்சு... உடனே பிரியமானவளே சீரியலில் முரட்டு பேபின்னு புருஷனை கொஞ்ச ஆரம்பிச்சுட்டாங்க, இப்படி எத்தனையோ சகிச்சுக்கிட்டோம்..

சினிமா பாட்டு

சினிமா பாட்டு

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் அன்பே அன்பே..முழுப் பாட்டு முடியுது... சூரியா, தமன்னாவை பார்த்து ரசிக்கலாமேன்னு நினைக்கறீங்களா? அதுதான் இல்லை...

விளம்பரம்

விளம்பரம்

அந்த பாட்டு முழுவதும் சன் டிவியின் எல்லா சீரியல்களிலும் நடிக்கும் அழகான ஹீரோ, ஹீரோயின் நடித்த சீரியல் சீன்களை வச்சு மிக்ஸ் பண்ணி இருக்காங்கங்க.. சரி சீரியல்தான் பார்க்க புடிக்கல.. ஆதித்யா,சன் லைஃப் இப்படி பார்க்கலாம்னு மாத்தினா... அதுலயும் இப்படி சீரியல் விளம்பரத்துக்கு சினிமா பாட்டு.

இது ஒரு கான்செப்ட்

இது ஒரு கான்செப்ட்

சீரியல் குடும்பம்னு ஒரு நிகழ்ச்சி... இது விஜய் டிவி ரூம் போட்டு யோசிச்ச கான்செப்ட். எல்லா சீரியல் குடும்பங்களும் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு சீரியலில் சேர்ந்து அத்தனை பேரும் நடிப்பாங்க.

60ம் கல்யாணத்துல

60ம் கல்யாணத்துல

சின்னத்தம்பி சீரியலில் சின்னத்தம்பியின் அம்மா அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கப் போகுது. இப்போதான் அரண்மனைகிளி சீரியலுக்கு பத்திரிக்கை வச்சு இருக்காங்க. இன்னும் இவங்க எந்தெந்த சீரியலுக்கு பத்திரிக்கை வைப்பாங்கன்னு தெரியலைங்க.

ஒண்ணு இப்படி யோசிக்கறாய்ங்க...இல்லேன்னா சினிமாக்காரங்க மூளையை அசால்ட்டா யூஸ் பண்ணிக்கறாங்க... என்னத்தை சொல்ல?

English summary
TV slot buyers are not worried about taking concepts, they just take it from movies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X