Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நயன்தாராவின் ஆவணப்படம் விமர்சனம்.. இதுதான் பிளஸ்! ஆனால் “இந்த” இடத்தில் கிரிஞ்ச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாராவின் 40வது பிறந்தநாளில் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆவணப்படம் இன்று நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தில் திரையுலகில் தான் சந்தித்த சவால்கள், காதல், தோல்வி, கல்யாணம் என பல விஷயங்களை நயன்தாரா பகிர்ந்து இருக்கிறார்.

நயன்தாராவின் ஆவணப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் உடன் திருமணம் நடைபெற்ற போது எடுத்து முடிக்கப்பட்டது. ஆனாலும் தனுஷிடமிருந்து நானும் ரவுடிதான் பட பாடல்கள் ஆவண படத்தில் பயன்படுத்த தடையில்லா சான்று கிடைக்காத காரணத்தால் இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

nayanthara nayanthara documentary movie dhanush vignesh shivan

இந்த நிலையில் பல்வேறு தடைகளை தாண்டி இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இது 1 மணி நேரம் 22 நிமிடம் ஓடக்கூடியது. இந்த திரைப்படத்தை பற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பலர் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள் அது பற்றி பார்க்கலாம்.

nayanthara nayanthara documentary movie dhanush vignesh shivan

அதில் ஒரு ரசிகர் கூறுகையில், நயன்தாராவின் ஆவணப்படம் மிகவும் அருமையாக உள்ளது. அதில் தன் சந்தோஷத்தையும், காதலையும் நம் எல்லோரிடமும் நயன்தாரா பகிர்ந்து இருக்கிறார். ஆனால் ஒரு ஆவண படமாக அதை இன்னும் மெருகேற்றி எடுத்து இருக்கலாம். குறிப்பாக விவரிக்கும் காட்சிகளிலும், எடிட்டிங்கிலும் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

nayanthara nayanthara documentary movie dhanush vignesh shivan

அதுபோல இன்னொரு ரசிகர் ஆவணப்படம் முதல் பாதி நல்லா இருக்கு இரண்டாம் பாதி கிரிஞ்சா இருக்கு என்று பதிவிட்டு இருக்கிறார். அதாவது நயன்தாராவின் சினிமா கேரியர் மற்றும் அவருடைய காதல் வாழ்க்கை பற்றிய படமாக இது இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் கதை நன்றாக தொடங்கினாலும் 40 நிமிடங்கள் ஒரே ரகம்தான். நயன்தாராவுடன் பயணித்த அனுபவங்கள் பற்றி நாகார்ஜுனாவும், நெல்சனும் பேசியுள்ளது அருமையாக இருந்தது என்று பகிர்ந்து இருக்கிறார்.

nayanthara nayanthara documentary movie dhanush vignesh shivan

அடுத்ததாக ஸ்ரீநிவாஸ் கல்யாண் என்ற ரசிகர், நயன்தாராவின் திரைபயணம், குடும்பம், அவர் சந்தித்த கஷ்டங்கள், அவரின் நட்சத்திர அந்தஸ்து, ரிலேஷன்ஷிப், கல்யாணம், குழந்தைகள் அடங்கிய ஆவணப்படத்தில் 37 நிமிடம் வரை சூப்பராக இருக்கிறது. எப்போ விக்னேஷ் சிவன் உள்ளே வந்தாரோ க்ரிஞ்ச் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மொத்த திருமணமும் netflix க்காக பிளான் பண்ணி எடுக்கப்பட்டது போல உள்ளது. அது கல்யாணம் போல தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

nayanthara nayanthara documentary movie dhanush vignesh shivan

அதுபோல ஆண்டவர் என்ற ஐடியில் இருந்து ஒரு ரசிகர், நயன்தாராவின் ஆவணப்படம் ஆரம்பமே கிரிஞ்சா இருக்கு, கொஞ்சம் கூட ஒட்டல. இதுல டப்பிங் கொடுமைகள் வேற இருக்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு ரசிகர் தன் திருமணத்தை வைத்து நயன்தாரா லாபம் பார்ப்பது வித்தியாசமான பிசினஸ் மைண்டாக உள்ளது என்று விமர்சித்து இருக்கிறார்.

nayanthara nayanthara documentary movie dhanush vignesh shivan
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+