ஏம்மா... இது மாதிரி நியாயமா நடந்துக்கோங்கம்மா.. கோபிநாத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவில், இரு பெண்மணிகளின் குழந்தை பிளானை கேட்ட கோபிநாத், ஒரு பெண்ணிடம் கூறினார், ஏம்மா இது மாதிரி நியாயமா நடந்துக்கோங்க என்று.

நீயா நானா நிகழ்ச்சியில், நாளை ஞாயிற்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில், கல்யாணம் செய்த உடனே குழந்தை பெற்றுக்கொள்வது, அதாவது குழந்தை பேறு தானாக நிகழ வேண்டிய ஒன்று, இல்லை இத்தனை வருடங்களுக்குப் பிறகு என்று பிளான் செய்து குழந்தை பெற்றுக்கொள்வது என்பது குறித்த விவாதம் நடைப்பெற்றது.

இதில் பலரும் தங்களது கருத்துக்களையம், தங்களது பிளான் பற்றியும் கூறி இருக்கிறார்கள். அதோடு, பிளான் செய்ததில் தங்கள் அடைந்த மன கஷடம், வேதனை குறித்தும் பேசி இருக்கிறார்கள். அனைவரும் பார்த்து பலரது அனுபவங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி இது.

 2 வருஷ பிளானிங்

2 வருஷ பிளானிங்

திருமணம் ஆகி 2 வருஷம் குழந்தை வேண்டாம் என்று பிளானிங் செய்தோம். ஆனால், அதற்குப் பின்னர் 4 வருஷம் எங்களுக்கு குழந்தை இல்லை சார். நாங்கள் பட்ட வேதனைக்கு அளவே இல்லை.. சொந்தக்காரர்கள் முன்னால் நாங்கள் பட்ட அவமானத்துக்கும் அளவில்லை என்று கூறினார் ஒரு இளைஞர்.குழந்தை பேறு என்பது தானாக நிகழ வேண்டிய ஒன்று இதற்கு எதற்கு பிளானிங் என்று ஒரு பெண் கூறினார்.

 ஜாலியாக காதலித்தோம்

ஜாலியாக காதலித்தோம்

ஒரு பெண்மணியிடம் உங்கள் குழந்தை பிளானிங் பற்றி கூறுங்கள் என்று கோபிநாத் கேட்டார். அப்போது அந்த பெண்மணி எங்களோடது அரேன்ஞ்டு மேரேஜ் சார்.. கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கனும்னு ஆசைப்பட்டோம். அதே மாதிரி ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் குழந்தை பெத்துக்கணும்னு பிளான் செய்தோம். ஜாலியா காதலித்தோம். மற்றவர் பொறாமைப்படும்படி வாழணும்னு ஆசைப்பட்டோம் சார் என்று சொன்னார்.

 பொறாமை எப்படி

பொறாமை எப்படி

எப்படி எல்லாரும் பொறாமைப்படும்படி வாழ்ந்தீர்கள் என்று கோபிநாத் கேட்க, நடு ரோட்டில் கைக்கோர்த்து நடந்தோம், நைட் ஷோ சினிமா பார்த்தோம்.. பைக் ரைட் இதெல்லாம் அனுபவிச்சோம் சார் என்று சொன்னார். அரேன்ஞ்டு மேரேஜ்ல லவ் பண்ணி வாழணும்னு ஆசைப்பட்டீங்க.. இப்போ என்ன பண்றீங்க என்று கேட்டார் கோபிநாத். இன்னும் லவ் பண்றோம் சார் என்று சொன்னார் அந்த பெண்மணி. இந்த லவ்வை ஆரம்பத்திலேர்ந்து பண்ணி இருக்கலாமே எதுக்கு பிளானிங் என்று கேட்டார் கோபிநாத்.

 மெட்ராஸை சுத்திப் பார்க்க

மெட்ராஸை சுத்திப் பார்க்க

இன்னொரு பெண்மணி நாங்க ஒன்றரை வருஷம் குழந்தை பெத்துக்க வேணாம்னு முடிவு பண்ணினோம் சார் என்று சொன்னார்.எதுக்கு ஒன்றரை வருஷம் என்று கேட்டதற்கு, சென்னையை சுத்தி பார்க்கலை சார்.. சுத்தி பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான் என்று கூறினார்.அப்போதுதான் கோபிநாத் காதல் செய்ய பிளானிங் செய்தோம் என்று கூறிய பெண்மணியிடம், ஏம்மா இது மாதிரி நியாயமா நடந்துக்கோங்க.. சென்னையை சுத்திப்பார்க்கலை அதனால் பிளான் செய்தொம் என்று அவர் கூறியதை திரும்ப சொன்னார்.

ரொம்பவும் பயனுள்ள ஷோ நீயா நானா..அதுவும் இந்த விவாத நிகழ்ச்சி கொஞ்சம் ஸ்பெஷலானதும் கூட!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+