உதயநிதி சர்ச்சை.. அதே நேரத்தில் நிவேதா பெத்துராஜின் திருக்குறள் பதிவு.. திரிஷாவுக்கு சப்போட்டா? காயத்திற்கான பதிலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட ஒரே ஒரு பதிவு சோசியல் மீடியாவில் புதிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதில் அவர் எந்த விளக்கமும் இல்லாமல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு திருக்குறளை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர்,

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

- திருக்குறள் 183

என்று மட்டும் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு எந்த சூழ்நிலையை மனதில் வைத்து வெளியிடப்பட்டது? என்ற கேள்வி தான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது


இந்த திருக்குறளின் அர்த்தம்

திருவள்ளுவர் கூறும் இந்த திருக்குறளின் பொருள், பொய்களை பேசி பிறரை பற்றி அவதூறு பரப்பி வாழ்வதைவிட அப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டு விலகுவது உயர்ந்த அறத்தை தரும் என்பதாகும். அதாவது புறங்கூறதல், பொய் அவதூறு போன்றவற்றை கடுமையாக கண்டிக்கும் குரலாக இது பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த பதிவு வெளியான நேரம் தான் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு குறித்து நடிகை திரிஷா இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில் நிவேதா பெத்துராஜ் திடீரென இந்த திருக்குறள் வெளியிட்டுள்ளதால் சில நெட்டிசன்கள் இது திரிஷாவுக்கு ஆதரவாக வெளியிட்ட பதிவு தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Nivetha Pethuraj Udhayanidhi Stalin Trisha

நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு

இன்னும் ஒரு சிலர், இந்த பதிவை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் கூறி வருகிறார்கள். காரணம் நிவேதா யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, எந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டவில்லை எனவே இதை நேரடியாக உதயநிதி அல்லது திரிஷா விவாகரத்துடன் இணைத்து பார்க்க முடியாது என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

திரிஷாவுக்கு சப்போட்டா?

அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் தன் மீது தவறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், தான் பேசாத வார்த்தைகளை கட் பண்ணி சேர்த்து இருப்பதாகவும் கூறி இருப்பதால் கூட நடித்த நடிகர் என்ற வகையில் அவருக்கு சப்போர்ட்டாக நிவேதா பதிவு வெளியிட்டிருக்கிறாரா? என்றும் ரசிகர்கள் அவருடைய பதிவில் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

Nivetha Pethuraj Udhayanidhi Stalin Trisha

ரசிகர்கள் கருத்து

ஆனால் இந்த பதிவில் நிவேதா பெத்துராஜ் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, எந்த விளக்கமும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் அவரிடம் யாருக்காக இந்த பதிவு என்று கேள்வி கேட்டு வரும் நிலையில் அது குறித்து அவர் விளக்கம் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+