“உள்ளம் கொள்ளை போகுதடா” சீரியல் ஞாபகம் இருக்கா? மீண்டும் வரப்போகுது! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியில் புதியதாக உருவான சீரியல்களை விடவும் டப் செய்யப்பட்ட சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. பிற மொழி தாக்கம் என்று சொல்வதை விடவும் பிற மொழி நடிகர் நடிகைகள் போடும் காஸ்டியூம் மற்றும் நகைகள் குறித்த எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு இதற்கு காரணமாக இருந்தது என்று சொல்லலாம்.

தமிழ் சீரியல்களை விடவும் டப்பிங் சீரியல்களில் வரும் அதிகப்படியான எக்ஸ்பிரஷன் மற்றும் அங்கு கொண்டாடப்படும் வித்தியாசமான விழாக்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. அதனாலையோ என்னவோ இப்போது தமிழ்நாட்டில் கூட பல பங்க்ஷன் புதியது புதியதாக தொடங்கப்பட்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும் பொதுவாக டப்பிங் சீரியல்கள் பாலிமர் மற்றும் ராஜ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வந்தன.
அதிலும் புதுப்புது அர்த்தங்கள், உறவுகள் தொடர்கதை, இனிய இரு மலர்கள், நெஞ்சம் பேசுதே, சிந்து பைரவி, உறவே உயிரே, உள்ளம் கொள்ளை போகுதடா உள்ளிட்ட பல சீரியல்களும் சூப்பர் ஹிட் சீரியல்களாக மாறின. அதில் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர்.
அதிலும் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் டைட்டில் பாடல் இப்போதும் பலருடைய செல்போனில் ரிங்டோனாக இசைத்துக் கொண்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்த சீரியல் பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ராம் மற்றும் பிரியாவின் இயல்பான காதல் கதை இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த சீரியல் சோனி டிவியில் ஒளிபரப்பான Bade Hachch Langthe Hain ஹிந்தி சீரியலின் தமிழ் டப்பிங் தான். முதல் முதலாக இந்த சீரியல் பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகும்போது நாளொன்றுக்கு இரண்டு முறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டன. மாலை 7 மணிக்கு புதிய எபிசோடு ஒளிபரப்பாகும். அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கும் மறுநாள் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
அதுபோல இந்த சீரியலில் டைட்டில் பாடல் ஸ்வேதா மேனன் பாடி இருந்தார். இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் மனதினை கொள்ளை கொண்டன. அதுபோல இந்த பாடலை எழுதியது கவிஞரும், பாடல் ஆசிரியருமான மறைந்த நா. முத்துக்குமார் தான். இந்த நிலையில் இந்த சீரியல் மீண்டும் புது வடிவத்தில் உருவாக்கப்பட போகின்றது என்று கூறப்படுகிறது.
இதில் கதாநாயகியாக சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரனும் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஆகாஷும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெய் ஆகாஷ் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஜீ தமிழில் "நீதானே என் பொன்வசந்தம்" சீரியலில் நடித்திருந்தார். அதுபோல ரேஷ்மா முரளிதரன் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த கிழக்கு வாசல் சீரியலில் நடித்திருந்தார். ஆனால் அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் இப்போது இவர்கள் இருவரும் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த சீரியலுக்கான சூட்டிங் வேலைகள் நடைபெற இருக்கிறதாம். அதுபோல இந்த சீரியல் ஜீ தமிழில் தான் ஒளிபரப்பாக போகிறதாம்.












Click it and Unblock the Notifications