கார்த்திக்கின் வியப்பூட்டும் நடிப்பு.. ஆனா, அந்த டைரக்டர் ஏன் அப்படி சொன்னார்? பிரபலம் சொல்வது நிஜமா
சென்னை: நவரச நாயகன் நடிகர் கார்த்திக் உச்சக்கட்ட பிரபலமாக இருந்தபோதே, சறுக்கலை சந்தித்தார்.. அவரை யாருமே திட்டமிட்டு வீழ்த்தவில்லை.. அவரே அவரை வீழ்த்திக் கொண்டார்" என்றும் மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Realone Media சேனலுக்கு பேட்டி அளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன், நடிகர் கார்த்திக் குறித்து பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். சாக்லேட் பாய் என்றெல்லாம் கார்த்திக்கை ஒரு எல்லைக்குள் அடைத்துவிட முடியாது. அவர் மிகவும் துள்ளலானவர்.. அனைவருமே ரசிக்கக்கூடிய முகமாக இருந்தார் கார்த்திக்.

குவாலிட்டியான சரக்கு
ஒரு முறை சினிமா ஷூட்டிங் போனபோது, அதில் நடித்து கொண்டிருந்த ஹீரோயினை காதலித்து, கல்யாணம் செய்தார்.. அந்த நடிகையை கல்யாணம் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளானார். பிறகு அவருடைய தங்கையை 2வது திருமணம் செய்து கொண்டார். அது அவருடைய சொந்த விருப்பம்.. அதையெல்லாம் நாம் விமர்சனம் செய்ய முடியாது..
கார்த்திக்குக்கு முதல் சறுக்கல் என்பதே, அவர் ஜாதீய ரீதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்.. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, சில போதைப்பழக்க வழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்.. இதன் காரணமாக, அவரது முக அமைப்பே மாறிவிட்டது. என்னதான் காஸ்ட்லி சரக்கு, உயர்தர குவாலிட்டியான சரக்கு என்றாலும், தொடர்ந்து அதில் சிக்கிவிடும்போது, முக அமைப்பையே மாற்றிவிடும்.. எப்போதுமே ஒரு நடிகனுக்கு முகமும், உடலும்தானே முதலீடு? கார்த்திக்குக்கு முடி நிறைய கொட்டிவிட்டது.
வத்தல் தொத்தல் டைரக்டர்
எனக்கு தெரிந்து, 1995-க்கு பிறகு ஒரு சினிமா இயக்குனர், இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வத்தல் தொத்தலாக மாறிவிட்டார்.. போதைதான் இதுக்கு காரணம்.. போதை என்றால் வெறும் சரக்கு மட்டுமே இல்லை.. எத்தனையோ வகையான போதைகள் உள்ளன..
இப்போது அந்த டைரக்டர் 3 வருடங்களுக்கு முன்புதான், தன்னுடைய ஆபத்தை உணர்ந்து போதையை கைவிட்டார்.. விரைவில் புதுப்படம் செய்ய போவதாகவும் அவரே என்னிடம் சொன்னார்.
இப்படித்தான் ஒருமுறை பாண்டி நாட்டு தங்கம் என்ற படத்தின் ஷூட்டிங், மதுரையை சுற்றியுள்ள சோழவந்தான் பகுதிகளில் எடுக்கப்பட்டது. அப்போது, கார்த்திக்குக்கு மதுரை நகரத்துக்குள் ஓட்டல் புக் செய்யப்பட்டிருந்தது. சோழவந்தான், அலங்காநல்லூர் ஷூட்டிங்குக்காக எல்லாரும் அங்கு சென்றுவிட்டார்கள். ஆனால், கார்த்திக் வரவில்லை. காலை 8 மணிக்கு முதல் காட்சி எடுக்க வேண்டியது 10 மணி ஆகியும் கார்த்திக் வரவில்லை..
மென்மையானவருக்கும் வந்த கோபம்
இதுகுறித்து டைரக்டர், அப்படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகனிடம் சொல்லவும், அவர் நேரடியாக கார்த்திக் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று விட்டார். கதவை தட்டியும் திறக்காததால், ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்லி, கதவை திறந்து கொண்டு உள்ளே போனால், போதையில் விழுந்து கிடக்கிறார் கார்த்திக். பிறகு முகத்தில் தண்ணீர் தெளித்து சகஜநிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்..
சங்கிலி முருகனை பொறுத்தவரை மிகவும் மென்மையானவர்.. ஷூட்டிங்கில் தயாரிப்பாளர் என்ற முறையில் எல்லாரிடமும் வேலை வாங்கிவிடுவார்.. அப்படிப்பட்ட மென்மையான சங்கிலி முருகனையே, கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர் கார்த்திக்.
தேசிய அரசியலான அரசியல் கட்சி நடிகை
"இப்படியே இந்த நிலைமை நீடித்துக் கொண்டிருந்தால், நீ சினிமாவில் நடிப்பதே கஷ்டம்," என்று காத்திக்கிடம் சங்கிலி முருகன் சொல்லியிருக்கிறார்.. அதற்கு பிறகு, கார்த்திக்குக்கு முக அமைப்பு, குரல் அமைப்பு எல்லாமே போய், கடைசியில் பட வாய்ப்புகளும் அவருக்கு போய்விட்டது. இதுபோன்ற பழக்கவழக்கங்களினால்தான் கார்த்திக் வீழ்ச்சி ஆரம்பமானது" என்று கூறியிருக்கிறார்.
ஆனால், டைரக்டர் விக்ரமன் பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்திக்கை புகழ்ந்து பேசியிருந்தார். "நீங்கள் ஷூட்டிங்குக்கு மட்டும் சரியான நேரத்தில் வந்தால் நல்லா இருக்கும்" என்று கார்த்திக்கிடம் சொன்னேன்.
அதற்கு கார்த்திக், "காலைல என்னால 7 மணிக்கெல்லாம் வர முடியாது. அதனாலதான் சிவாஜி சார்கூடயே என்னால நடிக்க முடியாமல் போய்விட்டது. சென்னையில் ஷூட்டிங் என்றால் 9,10 மணிக்கு வருகிறேன். சென்னையை தாண்டி என்றால் 11 மணிக்கு வந்துவிடுகிறேன் என்றார். அதன்படியே சொன்னபடியே செய்தார் ஜென்டில்மேன் கார்த்திக்.
வரும்போதே மேக்கப்புடன் வருவார்.. நைட் 2 மணி வரைக்கும் நடிப்பார்.. அப்போது உத்தண்டியில் ஷூட்டிங் நடக்கும்போது அவருக்கு ஏசி ரூம் கூட இல்லை. இத்தனைக்கும் ஏப்ரல் மே மாதங்களில்தான் அந்த படம் ஷூட் எடுத்து கொண்டிருந்தேன்.. கிரேட் பெர்ஃபார்மர்.. எனக்கு தெரிந்து சிவாஜி சார், கமல் சார், கார்த்திக் சார் என்றுதான் சொல்வேன்" என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications