சிவக்குமார் பேச்சுக்கு பதிலடி கொடுத்த நடிகை உமா ரியாஸ்கான்.. கட்டதுரை போட்டோவை வைத்து ரிவெஞ்
சென்னை: நடிகர் சிவகுமார் கடந்த வாரத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சூர்யாவின் சிக்ஸ் பேக் பற்றி பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உமா ரியாஸ்கான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் சிவகுமாருக்ககு அறிமுகமே தேவை இல்லை. ஒரு காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பிறகு சினிமாவிலும் சீரியலிலும் அப்பாவாகவும் அண்ணனாகவும் நடித்துக் கொண்டிருந்தார். இப்போது சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

சர்ச்சை பேச்சு
அதே நேரத்தில் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். சில வருடங்களுக்கு முன்பு தன்னை செல்பி எடுத்த ரசிகர் ஒருவர் செல்போனை பிடுங்கி உடைத்து இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.
சிக்ஸ் பேக் சர்ச்சை
அதற்குப் பிறகு மேடை நிகழ்ச்சிகளில் அவர் பேசும் விதமும் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரத்தில் கூட தன்னுடைய மகன் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது இன்னும் சோசியல் மீடியா பக்கங்களில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ரெட்ரோ திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்பு எவன்டா சிக்ஸ் பேக் வைத்தது? சூர்யாவை டாக்டர்கள் சிக்ஸ்பேக் வைக்க கூடாதுன்னு சொன்ன பிறகும் வைத்தான், சூர்யாவுக்கு பிறகும் எந்த நடிகரும் சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்று பேசி இருந்தார்.
சிவகுமார் பற்றி ட்ரோல்
சிவகுமார் பேசி முடித்த அடுத்த செகண்ட் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதற்குப் பிறகு இவர் பற்றி ட்ரோல் அதிகம் வரும் என்பது எதிர்பார்த்ததுதான். அதுபோல சூர்யாவுக்கு முன்பு எத்தனையோ நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தையும் ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது பற்றி விஷால் கூட தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார்.
விஷால் விளக்கம்
அதில் விஷால் பேசும் போது பொல்லாதவன் திரைப்படத்திற்காக தனுஷ் தான் முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். அதற்கு பிறகு சத்தியம் திரைப்படத்தில் நான் சிக்ஸ் பேக் வைத்தேன், அடுத்ததாக மதகஜராஜா திரைப்படத்தில் நான் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தேன். அதற்கு பிறகு தான் மற்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்தார்கள் என்று பேசி இருக்கிறார்.
உமா ரியாஸ்கான் பதிவு
ஆனால் தனுசுக்கு முன்பே நடிகர் ரியாஸ்கான் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் திரைப்படத்தில் ரியாஸ்கான் சிக்ஸ் பேக் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ரியாஸ்கானின் மனைவியான நடிகை உமா ரியாஸ் கான் சோஷியல் மீடியா பக்கங்களில் ரியாஸ்கானின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

வின்னர் கட்டத்துரை
அதைத் தொடர்ந்து வின்னர் திரைப்படத்தில் கட்டத்துரை ஆக நடிகர் ரியாஸ்கான் நடித்த காட்சியை ஒரு ரசிகர் பகிர்ந்து தமிழ் சினிமாவில் முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தது என் மகன் சூர்யா தான் என்று சிவக்குமார் சொன்னபோது கட்டதுரையின் ரியாக்சன் கேட்கல என்பது போல இருக்கிறது என்று ஒரு மீம்ஸ் இருக்கிறது அதை உமாரியாஸ்கான் தன் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ரோல் மாடல்
இதற்கு ரசிகர்கள் இதுதான் செம ரிவெஞ் ஆதாரத்தோடு போட்டோ போட்டு இருக்கீங்களே? கட்டத்துரையை சிவகுமார் மறந்துட்டார், ஆனால் நாங்கள் மறக்கல. அவர்தான் பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைப்பதற்கு ரோல் மாடல் என்றெல்லாம் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications