சொடக்கு போடற நேரத்துல மினிஸ்டர் கைதா...?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மினிஸ்டர் கைது என்பது வேடிக்கையான காட்சியா இருக்கு. நம்பவும் முடியாத காட்சிதான்.
இந்த காலத்துல ஒரு கவுன்சிலரை பாவம் ஒரு போலீஸ் கைது செய்ய முடியாம தவிக்கறாங்க. ரொம்ப அசால்ட்டா காரில் போய்க்கொண்டு இருக்கும் மத்திய அமைச்சர் சகுந்தலா தேவியை போலீஸ் வழி மறித்து கைது செய்யறாங்க.
என்னதான் ஆதாரம் இருக்கட்டுமே கேபினெட் கூடி முடிவு எதுவும் எடுக்க மாட்டாங்களா? முன் அறிவிப்பு அமைச்சருக்கு கொடுக்க மாட்டாங்களா?
நாடு இப்படி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...

மோதிரத்தில் சிப்பு
மினிஸ்டர் சகுந்தலா தேவியின் மோதிரத்தை தான் கோமாவிலிருந்த போது எப்படியோ உருவிடறாங்க மகாலட்சுமி. மோதிரம்தானேன்னு விட்டுடறாங்க மினிஸ்டர்.ஆனா,தம்பி ராஜு வந்து அக்கா மோதிரம் எங்கே..அதுலமுக்கியமான ஒரு சிப்பு இருக்குன்னு சொல்றாங்க.

மகாலட்சுமிக்கு சிப்பு
யதேச்சையாக மோதிரத்தை பிரித்து பார்த்த மகாலட்சுமிக்கு, மோதிரத்தினுள் ஒரு கேமிராசிப்பு இருக்கறது தெரிஞ்சுருது. அதன் உள்ளே எதாவது ரகசியம் இருக்கும்னு கமலாவின் மாப்பிள்ளையை வச்சு ஓபன் பண்ணிப் பார்த்தா.... சகுந்தலாதேவி கம்பெனி தயாரிக்கும் சாக்லேட்டில்,போதை மருந்து கணிசமாக கலந்து இருப்பது தெரிய வருது.

கொஞ்ச நேரத்துல
அடுத்த நிமிஷம்னு சொல்லக்கூடிய கொஞ்ச நேரத்துல சகுந்தலா தேவி காரில் வெளியில போயிகிட்டு இருக்காங்க காரை வழி மறிக்குது போலீஸ் கார். என்னஇன்ஸ்பெக்டர்..நான் பந்தோபஸ்து ஒன்னும் கேட்கலையேன்னு சகுந்தலா தேவி சொல்ல...ஒரு இன்ஸ்பெக்டர் வந்து உங்களை அரெஸ்ட் பண்றோம் மேடம்னு சொல்றார்..

அரெஸ்ட் மினிஸ்டர்
உடனடியா மினிஸ்டர் சகுந்தலா தேவி அரெஸ்ட் ஆகறாங்க.அதுக்குப்பிறகு என்ன நடக்குதோ இன்னும் தெரியலை.ஆனா,இது சாத்தியமான்னு கொஞ்சம்கூட யோசிக்காம ஒரு சீன.
இப்படி இருந்தா நாட்டுல நல்லாட்சி நடக்குதுன்னு அர்த்தம்...ஆனா,நம்ம ஊரில் இப்போ நடக்கற ஆட்சியில ஒரு கவுசிலரை கூட இப்படி கைது பண்ண முடியாதுங்க...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications