Eeramana Rojaave Serial: சமைச்சு கொண்டு வந்தவ ஊட்டிவிட மாட்டேனா மாமா?
Recommended Video
சென்னை: இவ்ளோ தூரம் வயக்காட்டு வரைக்கும் சமைச்சு கொண்டு வந்தவ ஊட்டிவிட மாட்டேனா மாமா? ஊட்டிவிடறேன்...ஆ காட்டுங்க மாமா என்று பொண்டாட்டி மலர் ஆசையாக கேட்கிறாள். புருஷன் வெற்றி மனம் நெகிழ்ந்து அமர்ந்து இருக்க, அவன் கண்களில் கண்ணீர் குளமாக நிற்கிறது.
எத்தனை பேருக்கு வாய்க்கும் இது போல பொண்டாட்டி, அதுவும் நொடிக்கு ஒருதரம் மாமா மாமா என்று சொல்லி, புருஷனை காதலிக்கும் பொண்டாட்டி. புருஷன் பொண்டாட்டின்னா இப்படி இருக்கணும் என்று ஆசைப்படும் அளவுக்கு நின்றால் , நடந்தால் என்று லவ்வையே சொல்லும் ஒரு சீரியல்தான் விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல். .
மலர் வெற்றி இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ள விடிய விடிய பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தூக்கம் வருதுன்னு ரெண்டு பேருமே சொல்லாமல் பேசிக்கொண்டு இருக்க மலர் அவன் மார்பில் சாய்ந்து தூங்கிவிடுகிறாள். இதை பார்க்கும் மகா ஜனங்களும் தங்களுக்கு சலிக்கவில்லை என்று ரசிக்கிறார்கள்.

தம்பியுடன் கல்யாணம்
மலர் வெற்றியின் அண்ணனை காதலிக்கிறாள். கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு ஒரு விபத்தில் மாப்பிள்ளை இறந்துவிட, தம்பி வெற்றியுடன் மலருக்கு கல்யாணம் நடக்கிறது. அந்தக் காதலை மறந்து இந்த கல்யாணத்தை எப்படி மலர் ஏற்றுக்கொள்கிறாள் என்பதுதான் கதை. இதைத்தான் ஒரு நீண்ட கதையாக இழுத்து சொல்லி இருக்கிறார்கள்.

மலர் மாமா
ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுக்க, அந்த குலுக்களில் புருஷன் பொண்டாட்டி ரெசார்ட்டில் ஓய்வெடுத்து என்ஜாய் பண்ணலாம் என்று அழைப்பு விடுகிறார்கள். அதில் இருவருக்கும் கொஞ்சம் நெருக்கமாகுது. அப்போதுதான் என்னை நீ எப்படி கூப்பிட ஆசைப்படறே மலர்னு வெற்றி கேட்கிறான். நீங்களே சொல்லுங்க என்று இவள் சொல்ல, இல்லை நீதான் சொல்லணும் என்று இவன் சொல்ல.. அப்போதுதான் புருஷனை மாமா என்று கூப்பிடணும்னு ஆசைப்படுவதாக சொல்கிறாள் மலர்.

மாமா ரிங் டோன்
அன்றிலிருந்து வெற்றியின் போன் நம்பர் மலரின் போனில் மாமா என்று சேவ் செய்யப்பட்டு, அதற்கு தனி ரிங் டோன் வைக்கும் அளவுக்கு நெருக்கம் வந்துருது. போன் அடிச்சாலே சொல்லுங்க மாமா சொல்லுங்க மாமான்னு ஒரே மாமா ட்ரீட்டுத்தான். பிறந்த நாளைக்கு வாழ்த்து சொல்லுவான் என்று எதிர்பார்த்து ஒவ்வொரு முறை அவன் போன் அடிக்கும்போதும், ம்ம் சொல்லுங்க மாமா என்று ஆசையா கேட்பது. பின்னர் அவன் வாழ்த்து சொல்லவில்லை என்று சப்பென்றாகிவிடுவது என்று அன்றைக்கு மட்டும் குறைந்தது 25 முறை மாமா என்று அழைத்து இருப்பாள்.

ஆ காட்டுங்க மாமா
வயல்காட்டில் வெற்றி வேலை செய்து கொண்டு இருக்க, கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு.. பின்னால நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு என்பது போல சாப்பாட்டை எடுத்து வருகிறாள் மலர். இவன் கையை கழுவிட்டு வரேன்னு சொல்ல, என்ன மாமா இவ்ளோ தூரம் சாப்பாடு எடுத்துட்டு வந்தவளுக்கு ஊட்டிவிடத் தெரியாதா? ஆ காட்டுங்க மாமா என்று மலர் ஊட்டிவிடுகிறாள். வெற்றியின் கண்களில் குளம் மாதிரி கண்ணீர்.
இதுதாங்க ஈரமான ரோஜாவே மலர் வெற்றியின் காதல் கதை!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications