Tom and Jerry: மறக்க முடியுமா டாம் அண்ட் ஜெரி..பப்பாயி ஷோ....?
ஹாலிவுட்: டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன்..பப்பாயி ஷோ குழந்தைகளை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த கார்ட்டூன் நிகழ்ச்சிகள். இதை பார்த்து தன்னை மறந்து சிரித்த பெரியவர்களும் உண்டு.
இவைகளை தயாரித்து அனிமேஷன் செய்து இயக்கிய இயக்குநர் ஜீன் டைட்ச் கடந்த வாரம் வியாழக்கிழமை இறந்து விட்டார். இதை நினைவு கூறும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் இவரது போட்டோவை தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்டு நினைவலைகளை பகிர்ந்துக்கொண்டு உள்ளனர்.
ஒரு பக்கம் டாம் இன்னொரு பக்கம் ஜெர்ரி நடுவில் ஜீன் டைட்ச் படம் என்று அவரது கார்ட்டூன் கற்பனைக்கு மதிப்பு தரும் வகையில் இருக்கிறது இந்த படம்.

டாம் அண்ட் ஜெர்ரி
உண்மையில் ஒரு வீட்டில் எலியும் பூனையும் இருந்தால் பல அட்டகாசங்கள் நடக்கத்தான் செய்யும். வீட்டில் கோபத்தோடு இவைகளைத் திட்டி விரட்டி விடும் சாதாரண மக்கள்தான் நாம். ஆனால், இந்த கிரியேட்டர் என்னமாய் யோசித்து டாம் அண்ட் ஜெர்ரி ரொட்டீன் வாழ்க்கையை குரும்புத் தனம் நிறைந்ததாய் யோசித்து குழந்தைகள் பார்த்து சிரிக்க படைப்பைத் தந்து இருக்கிறார் பாருங்கள்.

இசை மயம்தான்
டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் ஷோ முழுக்க இசை மயம்தான். டாம், ஜெர்ரி துரத்தி ஓடும் சத்தம்.. எதற்குள்ளாவது விழுந்து கத்துவது.. இதை கண்ட பூனை நக்கல் செய்து ஓடுவது.. சில இடங்களில் எலி பூனையை நக்கல் செய்து மாட்டிவிட்டு தப்பித்துக் கொள்வது என்று இதற்கான கட்சி மற்றும் இசை மட்டுமே ஷோ முழுக்க இருக்கும்.

யாரும் எந்த வயதினரும்
யாரும் இந்த கார்ட்டூன் ஷோவை பார்க்கலாம். அவ்வளவு எளிதாக எலி பூனை சண்டை புரிந்துவிடும். இதற்கு மொழி இல்லை. அதே போல வயது வரம்பும் இல்லை. வீட்டில் எலி பூனையை கண்டால் அடிக்க ஓடுபவர் கூட, இந்த ஷோ பார்த்த பின்னர் வீட்டில் இவைகள் என்னதான் செய்கின்றன என்று நிதானித்து பார்த்தவர்களும் உண்டு.

95 வயது ஜீன் டைட்ச்
95 வயதான ஜீன் டைட்ச் கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் தனது ப்ராக் குடியிருப்பில் இறுதி மூச்சு விட்டார். இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாவில் இவரது படத்தை வித்தியாசமாக டாம் அண்ட் ஜெர்ரி சேர்த்து ஒரு கார்ட்டூன் போல பதிவிட்டு உள்ளனர்.தங்களது குழந்தை பருவத்தை அற்புதமானதாக ஆக்கியமைக்கு நன்றி என்றும் பதிவிட்டு உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications