குடும்பத்தையே அழிச்சிட்டியே? பவர்ஃபுல் பெண்ணும், PR டீமும்.. சமந்தாவை போட்டு தாக்கிய பிரபல நடிகை
சென்னை: சமந்தாவுக்கும், பிரபல நடிகை பூனம் கவுருக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.. காரணம், சமீபத்தில் 2வது திருமணம் செய்து கொண்ட சமந்தாவை, பூனம் திட்டுவது போல ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.. அதிலும் காட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். இந்த போஸ்ட் தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நாக சைதன்யாவுக்கு 2வது திருமணம் நடந்த அடுத்த சில மாதங்களிலேயே சமந்தாவின் காதலும் இணையத்தில் கசிந்தது..

பேமிலி மேன், சிட்டாடல், ஹனி பன்னி வெப் சீரிஸ்களில் நடித்தபோது, அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதாக கூறப்பட்டது. இருவரும் பொது இடங்களில் ஜோடியாகவே வலம் வந்தனர்.. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை சமந்தாவே சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்.
ஒருகட்டத்தில் லிவிங் டூ கெதரில் வாழ்வதாகவும் கூறப்பட்டது. இது திரைப்பட உலகின் கவனத்தை பெற்றது.. காரணம், ராஜ் நிடிமொரு ஏற்கனவே ஷ்யாமலி டே என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.. ஆனால், மனைவியை 2022ல் விவாகரத்து பெற்றிருந்தார். அதன்பிறகே சமந்தாவுடன் காதல் உதயமானதாக கூறப்படுகிறது.
முதல் மனைவி ட்வீட்
ஒருமுறை, ராஜின் தோளில் தலை சாய்த்து படுத்திருக்கும் போட்டோவை சமந்தா பதிவிட்டிருந்தார்.. அப்போது ராஜ் நிடிமொருவின் மனைவி தன்னுடைய இன்ஸ்டாவில், "பார்க்க விரும்பும் முகமும் இங்கு தான் இருக்கிறது. நான் பிடிக்க விரும்பும் கையும் இங்கு தான் உள்ளது. நான் கேட்க விரும்பும் குரலும் இங்க தான் இருக்கிறது. நான் எப்போதும் உங்களைப் பற்றி தான் நினைக்கிறேன்" என்று பகிர்ந்திருந்தார்.

2022-லேயே மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தனது கணவரை நினைத்து முதல் மனைவி ஏன் இப்படி உருக்கமாக பதிவிட்டுள்ளார்?
ஒருவேளை சமந்தாவுடன் நட்பு ஏற்பட்ட பிறகுதான் இருவரும் பிரிந்திருக்கலாமோ? என்று ரசிகர்கள் அன்று சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பியது நினைவிருக்கலாம்.
2வது திருமணம்
ஒருவழியாக நேற்று முன்தினம் சமந்தா, ராஜின் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது.. கோவை ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங் பைரவி கோவிலில் அதிகாலையில் மொத்தம் 30 விருந்தினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.. இந்த போட்டோக்களை சமந்தாவே பதிவிட்டிருந்தார்.
இந்த திருமண நாளின்போதும், ராஜ் நிதிமோருவின் முதல் மனைவி ஷ்யாமலி தே தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "விரக்தியடைந்தவர்கள் அவநம்பிக்கையான செயல்களை செய்கிறார்கள்" என்று பதிவிட்டு போஸ்ட் போட்டிருந்தது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
மோசமான பலவீனம்
இப்போது பிரபல நடிகை பூனம் கவுர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தமிழில் நெஞ்சிருக்கும் வரை, வெடி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர்தான் பூனம் கவுர்..
""ஒரு குடும்பத்தை அழித்து விட்டு நீ ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொண்டாய். நன்றாக படித்த, சக்தி வாய்ந்த மற்றும் சுயநலமான பெண். PR வேலையால் உங்களை புகழ்கிறார்கள். பணத்தால் பலவீனமான, மோசமான நிலையில் உள்ள ஆண்களை வாங்க முடியும்." என்று பதிவிட்டிருக்கிறார்.
குடும்பத்தை பிரித்தவள்
சமந்தாவைதான் விமர்சித்து இப்படி மறைமுகமாக பூனம் ட்வீட் போட்டிருக்கிறாரா? இவருக்கும் சமந்தாவுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியலையே? என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல நாக சைதன்யாவிற்கும் சோபிதாவிற்கும் கல்யாணம் நடந்தபோது, குடும்பத்தை பிரித்துவிட்டாயே? என சோபிதாவை இணையவாசிகள் கோபத்துடன் கேட்டிருந்தனர்.. இப்போது, அதே கேள்வியை சமந்தாவிடமும் கேட்டு வருகிறார்கள்..
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications