Vaazhai OTT: ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் “வாழை”.. அதுவும் “இந்த” தளத்தில் தான்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் பொன்வேல் என பல பிரபலங்கள் நடித்த வாழை திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அது எந்த ஓடிடி தளத்தில் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு பெற்று விடுகிறது. அதில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜின் திரைப்படங்களும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. மக்களின் இயல்பான கதைக்களம் மற்றும் வாழ்க்கை அமைப்பை திரையில் காட்டுவதாலேயே மாரி செல்வராஜின் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான வாழை திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது. வாழை திரைப்படம் கடந்த 2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து இந்த திரைப்படத்திற்கு அதிகமான பாசிடிவ் கருத்துக்கள் வெளியானது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளும் எழுந்தது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி படம் தியேட்டரில் பல வாரங்கள் ஓடியது.
படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தை முக்கிய நட்சத்திரங்களுக்கு காண்பித்தது அவர்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனத்தை இந்த திரைப்படத்திற்கு பிரமோஷன் உக்தியாக பயன்படுத்தினார்கள். இந்த திரைப்படம் பார்த்து பாலா உட்பட பலர் கண்கலங்கி அழுதனர். திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலர் இயக்குனர் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கண்கலங்கிய வீடியோக்களும் இணையத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டது.

அதனாலேயே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளம்பருவத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படம் தியேட்டரில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஜிட்டல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி கைப்பற்றி இருக்கிறது. இந்த திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
வாழை திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரன் ஓளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் சூர்யா பிரபாகரன் எடிட்டிங் செய்து இருக்கிறார். அதுபோல தமிழ் சினிமா பிரபல தயாரிப்பு நிறுவனமான நாவ்வி ஸ்டுடியோஸ், பார்மல் மாஸ்டர் பிளான், ப்ரொடக்ஷன் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இணைந்து என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. அதோடு இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வினியோகம் செய்துள்ள நிலையில் இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. கண்டுக்களிக்க ரெடியா மக்களே!












Click it and Unblock the Notifications