+2 தேர்வில் அசத்திய “வாழை”பட சிறுவன்.. அதுவும் எவ்வளவு மார்க் தெரியுமா? சந்தோஷத்தில் நடிகை திவ்யா உருக்கம்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில், மாநிலம் முழுவதும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தில் நடித்த பொன் வேல் மார்க் வெளியாகி இருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மொத்தம் 7.91 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6 முதல் 20 வரை மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்த்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இருந்து இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆக பதிவாகியுள்ளது. மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று முன்னிலை வகித்துள்ள நிலையில், மாணவர்கள் 93.19% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாணவிகளை விட மாணவர்கள் 3.82% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளி வாரியாக
அரசுப் பள்ளிகள் - 92.16%, அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%. இதில் பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 6.59% அதிகமாகவும், இருபாலர் பள்ளிகள் 4.81% அதிகமாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியாக தேர்ச்சி விகிதமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல் போன்ற முக்கிய பாடங்களில் 98% முதல் 99% வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வாழை பட சிறுவன் +2 தேர்வில் சாதனை
இந்த சூழலில், சினிமா ரசிகர்களிடமும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய "வாழை" திரைப்படத்தில் சிறுவனாக நடித்த பொன்வேல் (Ponvel) எடுத்த பிளஸ் 2 மதிப்பெண்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
அந்த படத்தில் பசி காரணமாக தவித்துக் கொண்டிருக்கும் சிறுவனாக நடித்த அவர், தனது நடிப்பால் பலரது மனதை உருக்கியிருந்தார். தற்போது படிப்பிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இவரது மதிப்பெண் விவரங்கள்:
தமிழ் - 96
ஆங்கிலம் - 75
பொருளியல் - 77
வணிகவியல் - 81
கணக்குப்பதிவியல் - 93
கணினி பயன்பாடு - 84
மொத்தம் - 506 (PASS)

திவ்யா துரைசாமி பகிர்ந்த பதிவு வைரல்
"வாழை" படத்தில் அவருடன் நடித்த நடிகை திவ்யா துரைசாமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மதிப்பெண் பட்டியலை பகிர்ந்து, "Finally my thambi passed 12th" என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பலரும் பொன்வேலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் பாராட்டு
திரைப்படத்தில் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன், நிஜ வாழ்க்கையிலும் கல்வியில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறித்து, "நடிப்பிலும், படிப்பிலும் கெட்டிக்காரர்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திரிஷாவின் அதிர்ஷ்டம்.. நண்பர் விஜய்க்கு கிடைத்த வெற்றி! வெளிப்படையாக நடிகை போட்ட போஸ்ட்!
மொத்தத்தில், தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாநில அளவில் உயர்ந்த தேர்ச்சி விகிதத்துடன் வெளியாகியுள்ளதுடன், சாதாரண மாணவர்களிலிருந்து சினிமாவில் நடித்தவர்கள்வரை பலரது சாதனைகளும் கவனம் பெற்று வருகின்றன.
அதில் குறிப்பாக "வாழை" பட சிறுவன் பொன்வேல் எடுத்த மதிப்பெண்கள், தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.













Click it and Unblock the Notifications